LATEST

Friday, February 14, 2020

இந்திய காலநிலை பகுதி 3

இந்திய காலநிலை பகுதி 3

2. வங்காள விரிகுடா கிளை
•    தக்காண பீடபூமி மீது வீசும் வறண்ட காற்று வங்காள பிரிகுடாவை கடக்கும்போது மிகுந்த நீராவியை பெறுகின்றது. வங்காளத்தின் மீது வீசும் இக்காற்று அஸ்ஸாம் குன்றுகளால் தடுக்கப்படுவதால் அப்பகுதியில் அதிக மழை பொழிகிறது.
•    மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி என்னும் இடத்தில் அதிக மழை பொழிகிறது. இக்காற்று இமய மலைகளால் தடுக்கப்படுவதால் திசை மாறி கங்கை சமவெளி மீது வடமேற்காக வீசத் தொடங்குகிறது.
•    வங்காள விரிகுடாவிலிருந்து மேற்கே செல்ல செல்ல காற்றின் ஈரப்பதம் குறைந்து விடுகிறது. எனவே கங்கை சமவெளியிலிருந்து மேற்கே செல்ல செல்ல மழையின் அளவு குறைந்து விடுகிறது
•    இந்தியா பெரும் அளவில் தென்மேற்கு பருவகாலத்தில் மழை பெறுகிறது.
 
வடகிழக்கு பருவக்காற்றுக்காலம் அல்லது பின்னடையும் பருவக்காற்றுக் காலம்
•    செப்டம்பர் மாத இறுதியில் சூரியன் பூமத்திய ரேகையை கடந்து தென் கோளார்த்தத்தில் பிரகாசிப்பதால் தாழி அழுத்த மண்டல தெற்கு நோக்கி நகர்கின்றது. இதன் விளைவாக இதுவரை வீசிய தென்மேற்கு பருவகாற்று சிறிது சிறிதாக பின்வாங்குகிறது. இதனை வடகிழக்கு பருவக்காற்று அல்லது தென்மேற்கு பருவக்காற்றின் பின்னடைவு என்று கூறலாம்.
•    இக்காற்று வங்காள விரிகுடாவை கடந்து நீராவியை சுமந்து கிழக்கு கடற்கரையில் வீசி தமிழ்நாட்டிற்கு மழையை கொடுக்கிறது. இது தான் தமிழ்நாட்டிற்கு மழைக்காலம். இப்பருவ காலத்தில் வங்காள விரிகுடாவின் காற்றின் அழுத்தம் குறைந்து சூறாவளியும் தோன்றுகிறது. இச்சூறாவளிகள் இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் கடற்கரை பகுதிகளில் மிகுந்த மழையையும் சேதத்தையம் கொடுக்கிறது

No comments:

Post a Comment