LATEST

Thursday, February 13, 2020

அறிவியல் வினா விடைகள் பகுதி 46

அறிவியல் வினா விடைகள் பகுதி 46 

 

1. தாதுவிலிருந்து உலோகமானது இலாபகரமானதாகப் பிரித்தெடுக்கப் படுகிறது. அலுமினியமானது பாக்ஸைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.இது_____ என அழைக்கப்படுகிறது.
i) தாது 
ii) கனிமம்

2. தங்கம் என்ற தனிமமானது சேர்மமாகக்கிடைப்பது இல்லை. இது காற்று அல்லது நீருடன் வினைபுரிவது இல்லை இது _____ நிலையில் உள்ளது.
i) தனித்த 
ii) சேர்ந்த

3. பக்மினிஸ்டர் புல்லாரின் _____ ன் புறவேற்றுமை வடிவம்.................
i)நைட்ரஜன்.
ii) கார்பன்.
iii) சல்பர்

4. கிராஃபைட் அலோகமாக இருந்தாலும் மின்சாரத்தைக் கடத்துகிறது.இது_____ ன் காரணமாகக் கடத்துகிறது.
i) தனித்த எலக்ட்ரான்கள்
ii) பிணைப்பு எலக்ட்ரான்கள்

5. மீத்தேனின் வாய்ப்பாடு CH4அதனைத்தொடரும் அடுத்த C2H6 ஈத்தேன்.இவை இரண்டிற்கும் உள்ள பொதுவான வேறுபாடு_____
i) CH2 
ii) C2H2

6. அல்கைன் குடும்பத்தில் உள்ள முதல் சேர்மத்தின் ஐருPயுஊ பெயர்________
i) ஈத்தீன் ii) ஈத்தைன்

7. ஒரு பொருளின் முடுக்கத்திற்கான காரணம்;________
i) சமன்செய்யப்பட்டவிசை
ii)சமன்செய்யப்படாதவிசை 
iii) நிலைமின்னியல்விசை

8. உந்த மாறுபாட்டு வீதத்திற்குச் சமமான இயற்பியல் அளவு _______i ) இடபெயர்ச்சி
ii) முடுக்கம்
iii) விசை 
iv) கணத்தாக்குவிசை

9. ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம் _______
i) மிக அதிகம்
ii) மிகக்குறைவு
iii) சுழி 
iv) முடிவிலி

10. புவிப்பரப்பில் 50கிகி நிறையுள்ள மனிதனின் எடை.....
i) 50N
ii) 35N
iii) 380N
iv) 490N

No comments:

Post a Comment