LATEST

Wednesday, February 19, 2020

முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள், முக்கியத்துவம்

முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள்

•    Sovereign – இறையாண்மை – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.

•    Socialist – சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

•    Secular – மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)

•    Democratic – மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.

•    Justice – நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி

•    Liberty – உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு

•    Equality – சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்

•    Fraternity – சகோதரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.


முகவுரையின் முக்கியத்துவம்

•    அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்கள் பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது.
•    பால்கிவாலா- அரசியலமைப்பின் அடையாள அட்டை
•    முன்ஷி – நம் இறையாண்மையுடைய மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்.
•    சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் – எங்கள் நீண்ட நாள் சிந்தமையும் கனவையும் உள்ளடக்கியது.

No comments:

Post a Comment