LATEST

Wednesday, February 19, 2020

அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்

அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்

அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்
•    ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
•    ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.
•    அரசியலமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் செயல்படுத்தப்படலாம் என உணர வேண்டும்.
சில நேரங்களில் அரசியலமைப்பு நெடுங்காலமாக பின்பற்றப்படும் விதிகளும், பழமொழிகளும் நடைமுறைகளும் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என கருதப்படுகிறது.
 
ஒரு அரசியலமைப்பு என்பது:-
•    நாட்டின் ஆதாரச்சட்டமாகும்.
•    எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம்.
•    அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை விவரிக்கின்றது.
•    குடிமக்களின் உரிமையை கூறுகின்றது.
•    ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவை பற்றிக் குறிப்பிடுகின்றது.
•    இதுவே உயர்ந்த சட்டமாகும். இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அரசியலமைப்பின் தேவை

கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக அரசியலமைப்பு தேவைப்படுகிறது.
1.    அடிப்படை சட்டம் அரசாங்கத்திற்கு கடிவாளமாகும்.
2.    தனி மனித உரிமையைப் பாதுகாக்கவும்.
3.    சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்.
4.    குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்.
5.    இறையாண்மை அதிகாரத்தை வரையறுக்கவும்.
6.    நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்தவும்.

அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள்

1.    நிர்வாக அமைப்பும், நிறுவனமும்.
2.    அரசாங்க அங்கங்களின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் இடையே உள்ள தொடர்புகள்
3.    குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
4.    மக்களுடன் அரசாங்கத்தின் உறவு
5.    அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள்

அரசியலமைப்பு திருத்தமுறைகள்

•    அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள் சில சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். இவைகள் எழுதப்பட்ட அரசியலமைப்பிற்கு மிக அவசியம் என கருதப்படுகின்றன.
•    அரசியலமைப்பின் புனிதத் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மேலும் தனிநபர் சுதந்திரத்திற்கும், அரசியலமைப்பைச் சார்ந்தவைகளுக்கு உத்திரவாதம் அளிப்பது சிறப்பிற்குரியதே. அரசியலமைப்பு திருத்தம் எளிதான முறையிலும் கடினமான முறையிலும் கையாளப்படுகின்றது. இருப்பினும் இவை எல்லாம் சாதாரணமானவை.
•    சாதாரண முறையில் திருத்தம் மேற்கொண்டால் அரசாங்கம் நிலையற்ற தன்மையை அடையலாம். மேலும் கடினமான முறையில் திருத்தம் மேற்கொண்டால் இரண்டு வகையான விளைவுகள் ஏற்படலாம்.
•    முதலில் பொதுக்கருத்து அடிப்படையில் சட்டரீதியில் அல்லாத நிறுவனங்கள் ஏற்படும்.
•    இரண்டாவதாக இது போன்ற நிறுவனங்கள் உருவாக இடம் தராவிட்டால் கலகம் அல்லது புரட்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். எனவே, புரட்சி அல்லது நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி அரசியலமைப்பு திருத்த முறைகள் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment