LATEST

Wednesday, February 19, 2020

தற்கால அரசியலமைப்பு வகைகள் பகுதி 1

தற்கால அரசியலமைப்பு வகைகள் பகுதி 1

 தற்கால அரசியலமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1.    இயல்பாக மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள்
2.    எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்புகள்
3.    நெகிழா மற்றும் நெகிழும் அரசியலமைப்புகள்

இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு

•    விதிமுறைகளின் வளர்ச்சி, தேவை இலைகளில் அடிப்படையில் உருவானதுதான் இயல்பான மற்றும் பரிணாம வளர்ச்சியினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு.
•    பரிணாமத்தின் உச்சகட்டமாக நாட்டில் உள்ள அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புகள் தயாரிக்கப்படவில்லை.
•    ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்டு தொடர்ந்து வளர்ந்த பழக்கவழக்கங்களும், நடைமுறைகளும், மரபுகளும் பஞ்சாயத்துகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் விதிமுறைகளும் தான் அரசியலமைப்பு ஏற்பட காரணங்களாக இருந்திருக்கின்றன.
•    இயற்றப்பட்ட அரசியலமைப்பு முழுக்க மனிதனின் முழு முயற்சியினால் இயற்றப்பட்டதே ஆகும்.
•    மனசாட்சிப்படி உருவாக்கப்பட்டதன் அரசியலமைப்புகள். பெரும்பாலும் அரசர்களாலும், பாராளுமன்றத்தாலும், உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாலும் ஏன் அரசியலமைப்பு பேரவையினாலும் இயற்றப்பட்டவையே.
•    இயற்றப்பட்ட அரசியலமைப்பின் கூறுகள் அனைத்தும் ஏதேனும் ஒரு ஆவணத்திலோ அல்லது பல ஆவணங்களிலோ எழுதப்பட்டிருக்கும்.
•    இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள் தற்காலத்தில் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்பு என பிரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment