LATEST

Wednesday, February 19, 2020

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 2

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 2

 எழுதப்பட்ட அரசியலமைப்பு

•    எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவண வடிவில் அல்லது நூல் வடிவில் அடிப்படை மற்றும் அரசாகங்களின் பல்வேறு அங்கங்களுக்கு தேவையான விதிமுறைகளின் தொகுப்பேயாகும். தீர்க்கமான முறையில் உருவாக்கப்பட்டதே.
•    நேர்மையாக. மனசாட்சிப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு சில நாடுகளிலன் அரசியலமைப்பு பேரவையினாலும், மரபுப்படியும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட அரசியலமைப்பு இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டு மற்றும் அரசியலமைப்பு பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
•    இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பின்வரும் வாசகங்களோடு தொடங்குகிறது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் அரசியலமைப்பை ஏற்று இறையாண்மை நிறைந்த மக்களாட்சி குடியரசாக நிறுவுகிறோம்.
•    இந்தியா, மியான்மார் மற்றும் அமெரிக்காவின் அரசியலமைப்பு ஒரே தேதியில் உருவாக்கப்பட்ட தனி ஆவணமாக உள்ளது. ஆனால், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு தொடரான சிறு சிறு துண்டுகளாக அரசியலமைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.
•    எழுதப்பட்ட அரசியலமைப்பாக இருப்பதனால் சாதாரண சட்டங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக அறிய முடியும். அரசியலமைப்பு சட்டம் என்பது இன்றயாண்மை அதிகாரம் உள்ள ஆட்சியாளர்களால் இயற்றப்படுகிறது.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் நிறைகள்

•    திடமானது நிலையானது. குழப்பத்திற்கு இடமில்லை. அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருப்பதால் விருப்பத்திற்கு ஏற்ப அறியலாம். அரசாங்க அங்கங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாக அமைப்பு முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி அறிய குழப்பமோ தகராறோ ஏற்படாது. அவ்வாறு கருத்து வேறுபாடு நிலவினால் நீதிமன்றத்தை அணுகலாம்.
•    மிகுந்த கவனத்துடன் நீண்ட பிரதிவாதத்திற்கு பிறகு எழுதப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவை புலப்படுத்துகிறது. தற்காலிக விருப்பு வெறுப்புகளுக்கும் விரைவான தீர்மானங்களுக்கும் இடமில்லை.
•    எழுதப்பட்ட அரசியலமைப்பு தனி மனிதன் உரிமையை பாதுகாக்கிறது. அரசியலமைப்பில் உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இவைகள் சாதாரண சட்டங்களை விட உயர்வாக கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதால் வெவ்வேறு அரசாங்கங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றுவிதிலிருந்து உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
•    அரசியலமைப்பை அவ்வப்போது உள்ள அரசாங்கங்கள் மாற்றும் போது மக்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றப்படுவதினின்றும் அது பாதுகாக்கப்படுகிறது.
•    நெருக்கடி காலத்திற்கு ஏற்றது. அசாதாரண நிலை ஏற்படும் போது எழுதப்பட்ட அரசியலமைப்பு நிலையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
•    கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு பொருத்தமானது. ஏனென்றால் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் குறைகள்

•    திருத்தம் செய்ய கடினமான முறையை பின்பற்ற வேண்டும். நெகிழா தன்மையையும் பழமை வாதமும் பெற்றுள்ளது.
•    எழுதப்பட்ட அரசியலமைப்பில் நீதித்துறை பழமைவாதத்தை பின்பற்றும் அரசாங்கம் காலத்திற்கேற்ப சட்டம் கொண்டுவர நினைக்கும் போது, நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என பார்க்க நேரிடும்.
•    நாட்டின் விதிமுறைகள் மற்றும் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதால் எல்லா காலத்திற்கும் இது பொருத்தமானதாக இருக்காது. இது பிற்காலத்தில் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
•    விரிவான விளக்கமுடையதாக இருப்பதால் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்ட சட்ட விளக்கத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment