தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 3
எழுதப்படாத அரசியலமைப்பு
• ஒரு நாட்டின் அரசியலமைப்பு உருவாவது அந்த நாட்டின் இயல்பான வளர்ச்சியையம் கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பொறுத்ததாகும். இது ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை.
• ஒரு சில எழுதப்பட்டிருந்தாலும் அவை எழுதப்படாத அம்சங்களை விட மிக குறைவா உள்ளதாக அறியலாம். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.

எழுதப்படாத அரசியலமைப்பின் நிறைகள்
• காலத்திற்கேற்ப சுழ்நிலைக்கேற்ப சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது சட்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். வரையறை இல்லை. அங்கே வளர்ச்சி உண்டு.
• வளையும் தன்மையுடையது. பொதுமக்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வப்பொழுது மாற்றங்களைக் கொண்டு வரலாம். புரட்சிகள் தேவையில்லை.
• எழுதப்படாத அரசியலமைப்பில் மாற்றங்களை எளிதில் கொண்டு வரலாம். எதிர்பாராத நேரங்களில் மாற்றங்கள் செய்வது நன்மை தரும்.
• பண்பாடுகள் மற்றும் மரபுகளைக் காப்பாற்றுவதில் அவை சிறப்பானவை. பிரிட்டிஷ் அரசியலமைப்பு உடைபடாத வரலாற்றினைப் பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை வரலாறு மூலம் அறியலாம்.

எழுதப்படாத அரசியலமைப்பின் குறைகள்
• முடிவற்றது. குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. விதிமுறைகளை சாதாரண மனிதன் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்த நேர்மையான மனப்பாங்கைப் பெற்றிருப்போரால் தான் செயல்படுத்த முடியும். அதன் தன்மை வேகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள அவர்களால் தான் முடியும். சாதாரணமானவர்களால் புரிந்து கொள்ளவோ பின்பற்றவோ இயலாது.
• சில சமயங்களில் நிலையற்ற தன்மையுடையது.
• அதிகாரம் வழங்கப்பட்ட நிலையைக் காட்டிலும் நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லையை நீட்டித்துக் கொள்ளும். நீதிமன்றம் தன் விருப்பம் போல சட்ட இயல் மற்றும் அதன் நுணுக்கங்கள் ஆகியவற்றை அதன் விருப்பப்படி எடுத்தாளும்.
• எழுதப்படாத அரசியலமைப்பு மக்காளட்சிக்கு உகந்ததல்ல என்ற கருத்து வலிமையாக உள்ளது. மக்கள் வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளைத் தான் விரும்புவர். எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்தோர் குழு ஆட்சிக்குத்தான் பயன்படும்.

No comments:
Post a Comment