LATEST

Wednesday, February 19, 2020

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 4

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 4

நெகிழும் அரசியலமைப்பு

•    நெகிழும் அரசியலமைப்பில் அரசியலமைப்பு சாதாரண சட்டத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான முறைகளைப் பின்பற்றியே இயற்றப்படுகின்றன. அரசியலமைப்பு பொதுவாக மரபுகளின் அடிப்படையிலோ அல்லது எழுதப்பட்டோ இருக்கின்றது.
•    ஒரே மாதிரியாகவே திருத்தம் செய்யப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் திருத்திற்கும் திருத்தம் செய்ய எவ்வித பிரத்தியேக நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
•    நெகிழும் அரசியலமைப்பிற்கு சிறப்பான உதாரணமாக இங்கிலாந்து அரசமைப்பை கருதலாம். இங்கிலாந்து பாராளுமன்றமே உயர்நத அதிகாரம் அல்லது இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

நெகிழும் அரசியலமைப்பின் நிறைகள்

•    நெகிழும் அரசியலமைப்பை சாதாரண சட்டங்களைப் போல திருத்தம் செய்யலாம். காலத்திற்கேற்றாற் போல் புதிய முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
•    வளையும் தன்மை கொண்டுள்ளதால் சுலபமாக மக்களின் தேவைகளை நெகிழும் அரசியலமைப்பில் கொண்டு வரலாம். மக்களின் தேவை அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டுவிட்டால் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. இந்நிலை தான் இங்கிலாந்தில். காரணம் அவ்வப்பொழுது மக்களின் தேவைப்கேற்ப சட்டங்களை இயற்றிக் கொள்வதே ஆகும்.
•    வளரும் நாடுகளுக்கு நெகிழும் அரசியலமைப்பு தேவை. வளர்ச்சி அரசியலமைப்பின் அடிப்படையை பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சமுதாய அரசியல் மாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது. நெகிழும் அரசியலமைப்பிற்கு வலுவட்டம் தருவதாக உள்ளது. அரசியல் மற்றும் சமுதாயத்தை சரியாக மாற்றம் செய்ய எப்பொழுதும் மிகச்சரியான அரசியலமைப்பு அமைய இயலாது.
•    தேசியமரபுகளின் அடிப்படையில் நெகிழும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையும் மாற்றமும் நெகிழும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படுவதாகும். நெகிழும் அரசிலயமைப்பு பொதுமக்கள் கருத்தை உணரக்கூடிய நாடித்துடிப்பாக உளதோடு மக்களின் எண்ணத்தையும் முன்வைக்கிறது.

நெகிழும் அரசியலமைப்பின் குறைகள்

•    மாறிக்கொண்டே இருப்பது மக்களைத் திருப்திபடுத்த பெரும்பான்மையோர், சிறுபான்மையோரின் கணக்கில் நன்மையை கொள்ளாமல் இருக்க வழிவகுக்கும். இத்தகைய அரசியலமைப்பு நிலையான சிறந்த நிர்வாகத்தை தர இயலாது.
•    திருத்தம் செய்யும் முறை சுலபமாக உள்ளதால் அரசியலமைப்பு சுலபமாகவும் எளிதாகவும் மாற்றப்படுகிறது. மாறும் தன்மையுடைய மக்களின் பெருவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது.
•    தீர்மானங்கள் சில நேரங்களிலே ஆவேச உணர்ச்சிகள் அடிப்படையில் அமைதி மாற்றும் ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகும். ஸ்திர்த்தன்மைக்க தொல்லை தரும் நிலையும் ஏற்படலாம். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வழிவகுக்கலாம்.

No comments:

Post a Comment