LATEST

Wednesday, February 19, 2020

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 5

தற்கால அரசியலமைப்பு வகைகள் - பகுதி 5

நெகிழா அரசியலமைப்பு

•    நெகிழா அரசியலமைப்பில் திருத்தம் செய்ய சில பிரத்தியேக முறைகள் தேவைப்படுகின்றன. நெகிழா அரசியலமைப்பிற்கு உதாரணங்களாக. அமெரிக்கா. ஆஙஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடலாம்.
•    நெகிழா அரசியலமைப்பு சாதாரண சட்டங்களைவிட உயர்வானது. சாதாரண சட்டங்களை மாற்றுவது போல் இல்லாமல் சில குறிப்பிட்ட தனி வழிகள் மூலம் தான் நெகிழா அரசியலமைப்பிற்கு திருத்தம் மேற்கொள்ளலாம். இதனால் திருத்தம் செய்வது கடினமாகும். அரசின் இறையாண்மைக்கு உயர்வு அளிப்பதே நெகிழா அரசியலமைப்பின் நோக்கமாகும். இத்தன்மைக்கு புனிதத்துவம் வழங்குவது அரசியலமைப்பே ஆகும்.
•    இந்திய அரசியலமைப்பு இங்கிலாந்து அரசியலமைப்பு போல் நெறிழும் தன்மையும் அமெரிக்க அரசியலமைப்பு போல நெகிழாத்தன்மையும் பெற்றதல்ல.
•    ஆங்கில அரசியலமைப்பு போல அதிகப்படியான நெகிழும் தன்மையையோ அமெரிக்க அரசியலமைப்பு போல அதிக நெகிழாத்தன்மையையோ பெற்றில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையை கொண்டுள்ளது.

நெகிழா அரசிலயமைப்பின் நிறைகள்

•    நிரந்தாரமானது, மாறாத தன்மையுடையது. அனுபவமும் அறிவாற்றல் பெற்றவர்களாலும் எழுதப்பட்டதாகும்.
•    சட்டமன்றத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசியலமைப்பை பாதுகாக்கின்றது. அரசியலமைப்பு சட்டம், சட்ட மன்றங்களின் கைப்பாவையாக போய்விடக்சுடாது.
•    அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது இவ்வகை அரசியலமைப்பே. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இவைகளை எளிதில் மாற்றக்கூடாது.
•    சிறு பான்மையினரை பாதுகாப்பதே நெகிழா அரசியலமைப்பு, பெறும்பான்மையினர் எடுக்கும்நடவடிக்கைகள் சிறுபான்மையினரை பாதிக்கக்கூடாது. அவ்வாறு பாதிக்கும் போது நீதிமன்றம் அதனை பாதுகாக்க வேண்டும்.
•    நெகிழா அரசியலமைப்பு மக்களின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. மக்களின் கொந்தளிப்பு உணர்வுகள் அரசியலமைப்பை மாற்றும் முறையை கைவிட்டுவிடக் கூடாது.
•    கூட்டாட்சி ஒற்றுமைக்கும், பலத்திற்கும் பாதுகாப்பிற்கும் நெகிழா அரசியலமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது. நெகிழா அரசியலமைப்பில் தான் கூட்டாட்சிப் பகுதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறன்றன. ஒன்றின் மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்த இயலாது. இது நெகிழா அரசியலமைப்பில் தான் சாத்தியமாகும்.

நெகிழா அரசியலமைப்பின் குறைகள்

•    சில நேரங்களில் அரசியலமைப்ப மாற்றம் தவிர்க்க இயலாதது. ஆனால் நெகிழா அரசியலமைப்பை சுலபமாக திருத்தம் செய்ய முடியாது.
•    நெகிழா அரசியலமைப்பை எழுதியவர்கள் எதிர்க்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. வளரும் நாடுகளுக்கு இவ்வரசமைப்பு தகுந்தல்ல. மேலும் வளரும் நாடுகளில் அடிக்கடி மாற்றம்.
•    அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இயற்றப்பட்ட சட்டங்கள் வருகின்றனவா என உறுதி செய்து கொள்வதே நெகிழா அரசியலமைப்பில் நீதிமன்றத்தின் கவலையாக இருக்கும்.
•    குறைகளும் நிறைகளும் இருப்பினும் இன்றைய சு10ழ்நிலையில் நெகிழா மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்புதான் நல்லது என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது.
•    எழுதப்பட்ட அரசியலமைப்பில் எதிர்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நெகிழும் தன்மை பொருந்திய ஒரு சில அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு சில நெகிழும் மற்றும் நெகிழா அம்சங்கள் இடம் பெற்றிரக்கின்றன. எனவே இந்திய அரசியலமைப்பு இதர நாடுகளுக்கு இவ்வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது.

No comments:

Post a Comment