LATEST

Thursday, February 20, 2020

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை

•    இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியுடன் கூடிய இரட்டை அரசை (மத்திய மற்றும் மாநிலங்கள்) கொண்டிருந்தாலும் ஒற்றைக் குடியுரிமையைக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு என்று தனி குடியுரிமை இல்லை.
•    ஜனவரி, 1950-இல் எவரெல்லாம் இந்தியக் குடிமக்கள் என்பதனை இந்திய அரசியலமைப்பு விளக்குகிறது.

1. உறைவிடம் மூலம் குடியுரிமையைப் பெறுதல் (பிரிவு 5)

இதன்படி இந்தியாவை உறைவிடமாகக் கொண்ட எவரும் பின்வரும் நிலைப்பாட்டில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருந்தாலும் அவர் இந்தியக் குடிமகனாவார்.
•    அவர் இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும் (அல்லது)
•    அவருடைய பெற்றோரில் எவரேனும் ஒருவர் (தாய் அல்லது தந்தை) இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும் (அல்லது)
•    இந்திய அரசியலமைப்பு தொடங்கும் முன்னர் அவர் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

2. குடிபெயர்தல் மூலம் குடியுரிமை பெறுதல் (பிரிவு 6)

•    பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் (பிரிவு 6). இதன்படி பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் நிரந்தரமாக தங்க வந்தவர்களும் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவார்கள்.
•    அவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ அல்லது அவர்களின் பெற்றோரின் பெற்றோர்களில் ஒருவரோ 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும்
•    அவர்கள்07.1948-ஆம் தேதிக்கு முன்னர் குடிபெயர்ந்து வந்தவர்களாக இருப்பின்,அவர்கள் அவ்வாறு குடிபெயர்ந்து வந்த தேதி முதல் இந்தியாவில் வழக்கமாக குடிபெயர்ந்து வந்தவராக கருதப்படும்.
•    அவர்கள் 07.1948-ஆம் தேதிக்கு பின்னர் குடிபெயர்ந்து வந்தவர்களாக இருப்பின், அவர்கள் இந்தியக் குடிமக்கள் ஆவதற்குரிய பதிவை அதற்கென இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் செய்து கொண்டிருக்க வேண்டும். மேலும், அப்பதிவை செய்து கொள்வதற்கு முந்திய குறைந்த பட்ச காலமான ஆறுமாத காலமாவது அவர்கள் இந்தியாவிலேயே குடியிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment