Citizenship – குடியுரிமை
Citizenship – குடியுரிமை (Part-II Art 5-11)
குடியுரிமை என்பது ஒரு நாட்டில் குடியிருக்கும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமையாகும். குடியுரிமை என்ற சொல்லுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் வரையறை தரப்படவில்லை. இந்திய மக்கள் குடிமக்கள் மற்றும் அயல்நாட்டவர் (alien) என்று இருவகைப்படுத்தப்படுவர். குடிமக்கள் நாட்டன் முழுமையான அங்கத்தினர் ஆவர். அவர்கள் முழுமையான குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறுகிறார்கள். பிறநாட்டவர்களுக்கு (aliens) அவ்வுரிமைகள் கிடைக்காது.அரசியலமைப்பும் குடியுரிமையும்
• இந்தியா ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கொண்ட கூட்டாட்சியாக இருந்தாலும், ஒரேயொரு குடியுரிமையே அரசியலமைப்பால் அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கான தனிக் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 முதல் 10 வரையிலான பிரிவுகள் குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது.
• இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும்போது குடியுரிமை குறித்த சட்ட வகைமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டமும், அரசியலமைப்பு தொடங்கிய பின்னர் குடியுரிமை குறித்த வகைமுறைகளை 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டமும் விளக்குகின்றன.
No comments:
Post a Comment