LATEST

Thursday, February 20, 2020

Citizenship – குடியுரிமை

Citizenship – குடியுரிமை 

5. இந்தியக் குடியுரிமையை இழத்தல் (பிரிவு 9)

•    இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்குவதற்கு முன்பு (ஜனவரி 26, 1950) ஓர் இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான்.

6. குடியுரிமையைத் தொடர்தல் (பிரிவு 10)

•    பிரிவு 5 முதல் 8 வரையிலான பிரிவுகளின் கீழ் இந்தியக் குடிமக்களாகும் ஒவ்வொருவரும் தொடர்ந்து இந்தியக் குடிமக்களாகவே இருப்பர் என பிரிவு 10 கூறுகிறது. ஆனால், அவர்களது குடியுரிமையை பாராளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றுவதன் வாயிலாக இழக்கச் செய்யலாம்.

7. குடியுரிமையை ஒழுங்குபடுத்த பாராளுமன்றத்திற்குள்ள சட்டமியற்றும் அதிகாரம் (பிரிவு 11)

•    பாராளுமன்றம் சட்டமொன்றை இயற்றி குடியுரிமையை ஒழுங்குபடுத்தலாம் என பிரிவு 11 அதிகாரமளிக்கிறது. இதன்படி 1955-ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியது. இச்சட்டம், இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் குடியுரிமையை அடைதல் மற்றும் இழத்தல் குறித்துக் கூறுகிறது.
 
மேற்கண்ட சட்டம் கீழ்கண்ட நான்கு ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது.
•    குடியுரிமை திருத்தச் சட்டம், 1986
•    குடியுரிமை திருத்தச் சட்டம், 1992
•    குடியுரிமை திருத்தச் சட்டம், 2003
•    குடியுரிமை திருத்தச் சட்டம், 2005
தொடக்கத்தில் குடியுரிமைச் சட்டம், 1955 காமன்வெல்த் குடியுரிமையையும் தன்னுள் கொண்டிருந்தது. 2003 திருத்தச் சட்டம் மூலம் நீக்கப்பட்டது.

No comments:

Post a Comment