LATEST

Thursday, February 20, 2020

இந்திய குடியுரிமையைப் பெறும் முறைகள்:- (5)

இந்திய குடியுரிமையைப் பெறும் முறைகள்:- (5)

 இந்திய குடியுரிமையைப் பெறும் முறைகள்:- (5)

1. பிறப்பு (By Birth)
2. மரபுவழி(By DeSupreme Court)
3. பதிவு (By registration)
4. இயல்பூட்டுதல் (By Naturalisation)
5. நிலப்பகுதி இணைப்பு (By incorporation of Territories)

1. பிறப்பு

•    இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி இந்திய எல்லைக்கள் 1950 ஜனவா 26 க்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இந்தியக் குடியுரிமை பெறுகின்றன.
•    ஆனால் வெளிநாட்டு தூதுவர்கள், அன்னியர்கள் தவிர.
•    1986 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்திற்கு பின்னர் குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பின் அவர் பிறப்பில் குடிமகனாவார்.

2. மரபுவழி:

•    ஜனவரி 26, 1950 க்கு முன்பே (அ) பின்பே இ;ந்திய எல்லைக்கு அப்பால் பிறகு வாழும் இந்திய குடிமக்களின் (தாய்இ தந்தை)குழந்தைகள் மரபுவழிக் குடியுரிமை பெறுவார்கள்.

3. பதிவு

•    இந்தியா வம்சவழியினர்கள் இந்தியாவில் 7 வருடம் தங்கியிருந்தால்
•    வெளிநாடுகளில் குடியிருக்கும் இந்திய வம்சாவழியினர்
•    குடியுரிமை பெற்ற இந்தியரை மணக்கும் வெளிநாட்டு பெண்கள் இந்தியாவில் 7 ஆண்டுகள் தங்கியிருந்தால்
•    இந்தியாவில் பிறக்காமல் அவர்களது. பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால்
•    காமன்வேல்த் நாடுகளை சேர்த்த வயது வந்தோர் போன்றவர்களுக்கும் பதிவு மூலம் இந்திய குடியுரிமை பெறலாம்.

4. இயல்பூட்டுதல் (Naturalization)

வெளிநாட்டவர்கள் இந்தியாவில் 12 ஆண்டுகள் குடியிருந்தால் இயல்பூட்டுதல் மூலம் இ;ந்திய குடியுர்pமை வழங்கப்படலாம்.

நிபந்தணைகள்

•    தகுதியற்ற நாடு என இந்தியாவில் அறிவிக்கப்படாத நாட்டை சேர்ந்தவராக இருத்தல்
•    தன் தாய் நாட்டின் குடியுரிமையை துறந்தவராக இருத்தல்
•    நல்ல பண்புடையவராக இருத்தல்
•    இந்திய அட்டவணையில் உள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றை அறிந்திருத்தல் வேண்டும்.
•    இந்திய அரசுப் பணியில் (அ) இந்தியாவில் குறைந்தது ஓர் ஆண்டாவது இந்தியாவில் வாழ்ந்து இருத்தல் (மனு செய்யும் ஆண்டிற்கு முந்தையை ஆண்டு).
•    குடியுரிமை சான்று வழங்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து இந்தியாவில் குடியிருக்க ஒப்புதல் அளித்தல்.
•    அறிவியல், தத்துவம், கலாச்சாரம், இலக்கியம், உலக அமைதி, மனித இன மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பான சேவை செய்த வெளிநாட்டவர்களக்கு அரசு மேற்கொண்ட நிபந்தனைகளிலிருந்து விதி விலக்கு அளித்தும் இயல்பூட்டுதல் மூலம் குடியுரிமை வழங்கலாம்.
•    அன்னை தெரசா இதன் மூலம் குடியரிமை பெற்றார்.
 

5. நிலப்பகுதி இணைப்பு:-

•    புதியதாக ஓர் நிலப்பகுதி இந்தியாவுடன் இணைவது மூலம் அப்பகுதி மக்களும் இந்திய குடிமக்களாக கருதப்படுவர்.
•    கோவா, டையூ, டாமன், பாண்டிச்சேரி

No comments:

Post a Comment