LATEST

Friday, February 21, 2020

அடிப்படை கடமைகள் (Fundamental duties)

அடிப்படை கடமைகள் (Fundamental duties)

அடிப்படை கடமைகள் (Fundamental duties)

அரசியலமைப்பை உருவாக்கிய நமது பெருமக்கள் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளை அரசியலமைப்பில் சேர்க்க தேவையில்லை என கருதினர்.
•    1976-ம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சரவை சரண்சிங் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து பரிந்துரையை கேட்டது.
•    காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் மத்திய அரசு இப்பரிந்துரையை ஏற்றது அதன்படி 1976-ம் ஆண்டு 42-வது திருத்தம் வாயிலாக IV A என்ற புதிய பகுதியை அரசியலமைப்பில் சேர்த்தது.
•    புதிய பகுதி 51A என்ற ஒரு சரத்தை மட்டும் கொண்டுள்ளது. இதில் 10 கடமைகள் சேர்க்கப்பட்டன. பின்பு 2002-ம் ஆண்டு மேலும் ஒரு அடிப்படைக் கடமை என்று சேர்க்கப்பட்டு தற்போது 11-ஆக திகழ்கிறது.

அடிப்படைக் கடமைகளின் முக்கியத்துவம்

1.    சில கடமைகள் தார்மீக கடமைகளாக திகழும்போது இதர கடமைகள் சிவில் கடமைகளாக திகழ்கின்றன.
2.    இதன் மதிப்புகளைச் சோதிக்கும்போது இவை இந்தியர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே திகழ்கின்றன.
3.    இக்கடமைகள் இந்திய குடிமக்களுக்கு மட்டும் பொருந்தும். அயல் நாட்டவருக்கு பொருந்தாது.
4.    அடிப்படைக் கடமைகள் மீறப்பட்டதற்காக நீதிமன்றம் வாயிலாக நிலைநாட்ட முடியாது. எனினும் பாராளுமன்றத்தின் மூலம் தேவையான சட்டங்களை இயற்றி செயல்படுத்தலாம்.
5.    அரசியலமைப்பின் முக்கியமான இப்பகுதி இன்று புறக்கணிக்கப்ப்டட பகுதியாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment