LATEST

Friday, February 21, 2020

அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகளை நடைமுறைப்படுத்துதல்

அரசுக் கொள்கையின் வழிகாட்டி நெறிகளை நடைமுறைப்படுத்துதல்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி நெறிகளுள் சில:

•    அனேகமாக, வேலைவாய்ப்பு என்பதன் அனைத்துக் களங்களிலும் குறைந்த பட்ச ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.
•    ஆண் – பெண் இருபாலருக்கும் சம வேலைக்கு சம ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளன.
•    கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
•    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் மற்றும் ஸ்வர்ண ஜயந்தி கிராம் ஸ்வரோஜ்கார் யோஜனா – போன்றவை எடுத்துக்காட்டுகள்.
•    பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு அரசியல் சட்ட பூர்வமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் கிராம ஊராட்சிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டும் வருகின்றன.
•    எண்பத்தி ஆறாவது அரசியல் சட்டத் திருத்தம், குழந்தைகளுக்கு இலவச,கட்டாயக் கல்வி அளிப்பதற்கான விதியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பளிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் கல்விக்கான உரிமைச் சட்டம், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் பொருட்டு நிறைவேற்றப்பட்டது.
•    சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பல சட்டங்கள் நிலைவேற்றப்பட்டுள்ளன.
•    ஏழைகள், பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடி மக்கள் ஆகியோருக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் அவர்களுக்காக இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
•    சுரண்டலில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கு ஏராளமான சட்டங்களும், நலத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
•    நாற்பத்தி இரண்டாவது அரசியல் சட்டத் திருத்தம் ஒரு வழிகாட்டி நெறியைக் கூடுலாகச் சேர்த்துள்ளது. சுற்றுச்சூழலின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மற்றும் காடுகள் மற்றும் வனங்கள் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காகவும் – உறுதிப்படுத்துதலை இது செய்கிறது. காண்டாமிருகங்கள், யானைகள் திட்டம், புலிகளைக் காப்போம் திட்டம் போன்ற பல திட்டங்கள், மேற்கண்ட இந்தப் புதிய, கூடுலாகச் சேர்க்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிக்கிணங்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நிர்வாக இயந்திரத்திலிருந்து நீதித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
•    வரிச்சலுகை வழங்குவதன் மூலம் குடிசைத் தொழில்கள் நிறுவப்பட்டு, பாதுகாக்கவும் படுகின்றன.
•    நமது வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் கொள்கைகளுடன் உடன்பாடுடையதாக அமைந்திருப்பதுடன் நாடுகளுக்கிடையே நீதியான மற்றும் மேன்மை மிக்க உறவுகளைப் பராமரித்து வருகிறது.
•    இந்த அரசாங்கம், உலக அமைதியை ஆதரிப்பமுடன் அதற்காகப் பணியாற்றவும் செய்கிறது.
•    மேற்கண்டவற்றைக் காணும் போது, மத்திய, மாநில மற்றும் உள்ளுர் மட்டங்களில் உள்ள அரசாங்கங்கள், வழிகாட்டி நெறிகளை நடைமுறைப்படுத்துவதற்காகப் பணியாற்றுகின்றன என்பது தெளிவாகும். ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், வறுமை – வேலையில்லாத் திண்டாட்டம் – மற்றும் மோசமான சுகாதாரம், கல்வியறிவின்னை போன்ற பிரச்சனைகள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.
•    வழிகாட்டி நெறிகளின் ஆன்மா என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ஆகும். இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை; இன்னும் பல சவால்கள் எதிர் கொண்டிருக்கின்றன.
•    வழிகாட்டி நெறிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முழுமையான எதிர்வினையைக் கோருபவையாக இவை உள்ளன.
•    திட்டக் கமிஷன் – 1950
•    பேறுகால உதவிச் சட்டம் – 1951
•    சமமான ஊதியச்சட்டம் – 1976
•    ஆயுள் காப்பீட்டை தேசியமயமாக்கியது – 1956
•    14 தேசிய வங்கிகளை தேசியமயமாக்கியது – 1969
•    பொதுக் காப்பீட்டை தேசியமயமாக்கியது – 1971
•    மன்னர் மானியங்களை ஒழித்தது – 1971

No comments:

Post a Comment