LATEST

Thursday, February 20, 2020

நீதிப்பேராணை (Writs)

நீதிப்பேராணை (Writs)

 நீதிப்பேராணை (Writs)

1. ஆட்கொணர் நீதிப் பேராணை (Haebeus Corpus)
2. செயலுறுத்தும் பேராணை (Mandamus)
3. நெறப்படுத்தும் பேராணை (Certiorari)
4. தகுதி வினவும் பேராணை (Quo Warranto)
5. தடைசெய்யும் நீதிப்பேரணை (Prohibition)

1. ஆட்கொணர் நீதிபேராணை (Haebeus Corpus) To produce the body

•    சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதை தடை செய்வதே அட்கொணர் நீதிபேராணை ஆகும்.
•    இந்த ஆணை வழங்கப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதி மன்றத்தின் முன்பு கொண்டுவரப்பட வேண்டும்.

2. செயலுறுத்தம் நீதிப் பேராணை (Mandamus) - command

•    இது ஒரு நபரை (அ) அதிகார அமைப்பை ஒரு பொதுக் கடமைச் செய்ய வேண்டும் எனக் கட்டளையீடும் நீதிமன்ற உத்தரவாகும்.

3. நெறியுறுத்தும் நீதிப் பேராணை (Certiorari) - certify to quash the “Error of law”

•    கீழ்நிலை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் முடிவு செய்த வழக்குகளின் ஆவணங்களைத் தங்களின் ஆய்விற்கு அனுப்பும் படி உச்ச நீதிமன்றம் (அ) உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு.
•    கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமாக இருப்பின் அதனை தள்ளுபடி செய்யும்.

4. தகுதி வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto) what is your Authority)

•    எந்த அதிகாரத்தின் கீழ், ஒரு நபர் பொதுப்பதவியை வகிக்கிறார் என்ற வினா உத்தரவு ஆகும்.
•    பதவி வகிக்க தகுதி அற்றவர் என்று கருதினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
•    Not issued against Ministerial Office, Private Office
Condition for the grant
•    சம்பந்தப்பட்ட பதவி பொதுப்பதவியாக இருக்க வேண்டும்
•    அந்த பொதுப் பதவி நிரந்தரமானதாக இருக்க வேண்டும்
•    சம்பந்தப்பட்ட நபர் அப்பதவியை வருத்துக் கொண்டிருக்க வேண்டும்
•    அப்பதவி சட்டத்திற்குப் புறம்பாக வகித்துக் கொண்டிருக்க வேண்டும்
•    பின்னதாக ஏற்படும் தகுதியிழப்பு.

5. தடை செய்யும் நீதிப்பேராணை: (Prohibition)- To Prevent

•    தனக்கு கீழ் உள்ள நீதிமன்றங்கள், நீதித்தன்மை வாய்ந்த அதிகார அமைப்புகள் மற்றும் தீர்ப்பாயங்கள் தங்கள் முன் உள்ள ஒரு வழக்கு நடவடிக்கையில் தங்களது அதிகார வரம்பை மீறி அல்லது சட்டத்திற்கு முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை மேற்கோண்டு அந்த அமைப்புகள் நடத்துவதை தடை செய்யப்பிறப்பிக்கும் உத்தரவு.

No comments:

Post a Comment