LATEST

Monday, March 16, 2020

இந்திய பாராளுமன்றம் - சபாநாயகரின் பங்கு, அதிகாரம் மற்றும் பணிகள்

இந்திய பாராளுமன்றம்

சபாநாயகரின் பங்கு, அதிகாரம் மற்றும் பணிகள்

1.     மக்களவையின் தலைவராகவும் அதன் பிரதிநிதியாகவும் திகழ்கிறார்.

2.    மக்களவை உறுப்பினர்களின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள், ஒட்டுமொத்த அவை மற்றும் அதன் குழுக்கள் அனைத்திற்கும் பாதுகாவலராக திகழ்கிறார்.

3.    அவையின் பொறுப்பாளரான சபாநாயகருக்கு உயர்ந்த மரியாதையும், கௌவரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

4.    மக்களவையில் சபாநாயகர் மூன்றுவித அதிகாரங்களை பெற்றுள்ளார்.

•    அவையின் நடவடிக்கைகளில் சமவாக்கு ஏற்படும் போது சபாநாயகர் தனது வாக்கை செலுத்தி தேக்கநிலையை நீக்குவார்.

•    அவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களில் எவை பண மசோதா (அ) பண மசோதா அல்ல என சபாநாயகரே முடிவு செய்து குடியரசுத்தலைவரின் முன் அனுமதிக்கு அனுப்புவார்.

•    10-வது அட்டவணையில் உள்ளவாறு ஒரு உறுப்பினர் தகுதி இழப்பு பற்றி சபாநாயகர் தான் முடிவு செய்வார்.

No comments:

Post a Comment