இந்திய பாராளுமன்றம்
மக்களவை சபாநாயகர்
1. அரசியலமைப்பின் சரத்து 93-ன் படி மக்களவைக்கு சபாநாயகர் ஒருவர் இருக்க வேண்டும். அவர் மக்களவை உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2. அவரது இடம் காலியானால் உடனடியாக வேறொரு உறுப்பினரை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதியை குடியரசுத்தலைவர் அறிவிப்பார்.
3. பொதுவாக சபாநாயகரின் பதவி மக்களவை பதவிகாலம் முடியும் வரை தொடரும்.
எனினும் அவரது பதவி காலியாவதற்கான சில காரணங்கள் உள்ளன.
• சபாநாயகரின், உறுப்பினர் தகுதி நீக்கப்படல்,
• சபாநாயகரே பதவி விலக விரும்பி துணை சபாநாயருக்கு பதவி விலகல் கடிதத்தை அளித்தல்,
• மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்தல், போன்ற காரணங்களாலும் பதவி காலியாகும்.
1. சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும்போது, 14 நாளுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும். பதவி நீக்க தீர்மானம் மக்களவையில் கொண்டுவரும் போது அவை நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்க முடியாது.
2. ஆனால் அவை உறுப்பினராக அவையின் நடவடிக்கைகளில் பங்கு பெறலாம். எப்போதெல்லாம் மக்களவை கலைக்கப்படுகிறதோ அப்போது சபாநாயகர் பதவி காலியாகாது. அடுத்த பொதுத்தேர்தல் நடந்து புதிய அரசாங்கத்தின் சபாநாயகர் பதவியேற்கும் வரை அவரது பதவி தொடரும்.
No comments:
Post a Comment