இந்திய பாராளுமன்றம்
உறுப்பினர்கள் இடம் காலியாதல்
1. ஷரத்து 101-ன்படி உறுப்பினர் இடம் காலியாதல்களாவன.
2. இரண்டு இடங்களில் உறுப்பினராதல்:
• ஒருவர் பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் அல்லது பாராளுமன்றத்திலும், மாநிலச் சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க முடியாது.
• அவ்வாறு இருந்தால் அவர் ஏதேனும் ஓர் இடத்தை விட்டுவிட வேண்டும்.
3. தகுதியிழத்தல்:
• ஷரத்து 102-ன் படி சில காரணங்களுக்காக தகுதி இழப்பு செய்யப்படும்.
• எ.கா. உறுப்பினர் ஆன பின்பு மனநிலை பாதிப்பட்டால் தகுதி இழப்பு செய்யப்படும்.
4. பதவியிழத்தல்:
• பாராளுமன்ற உறுப்பினர் தாமே முன்வந்து, தாம் சார்ந்திருக்கும் சபையின் தலைவருக்கு பதவியை விட்டு விலக விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினாலும் அவரது பதவி காலியாகி விடும்.
5. அனுமதியின்றி விடுப்பெடுத்தல்:
• உறுப்பினர் எவரேனும் தாம் சார்ந்துள்ள சபையின் முன் அனுமதியின்றி அறுபது நாட்களுக்கு மேல் அவை நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் இருந்தாலும் அவருடைய இடம் காலியானதாக அறிவிக்கப்படும்.
6. இதர இனங்கள் :
• உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால்,
• அவையினரால் வெளியேற்றப்பட்டால்,
• குடியரசுத்தலைவர், குடியரசுத்துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால்,
• மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டால் உறுப்பினர் பதவி இழக்க நேரிடும்.
No comments:
Post a Comment