LATEST

Monday, March 16, 2020

இந்திய பாராளுமன்றம் - கட்சித்தாவல் மூலம் தகுதி இழப்பு செய்தல்

இந்திய பாராளுமன்றம்

கட்சித்தாவல் மூலம் தகுதி இழப்பு செய்தல்

•    அரசியலமைப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர் ஆன பின்பு கட்சித் தாவலில் ஈடுபட்டால் உறுப்பினர் தகுதி இழப்பர். இதனை அட்டவணை பத்து விவரிக்கிறது.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி இழப்பிற்கு உள்ளாகும் உறுப்பினர்களாவோர்:
 
•    உறுப்பினர் தன் விருப்பத்துடன் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியுடன் சேர்ந்தால்,

•    அரசியல் கட்சியின் விருப்பத்திற்கு மாறாக ஓர் உறுப்பினர் வாக்களிக்காமல் இருந்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ,

•    சுயேட்சை உறுப்பினரும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தாலோ,

•    எந்த ஒரு நியமன உறுபபினர் 6 மாதத்திற்கு பின்பு ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்தாலோ,

•    10-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்சித்தாவல் தடுப்புத் தகுதி இழப்புகளை மாநிலங்களவையில் அதன் தலைவரும் மக்களவையில் மக்களவைத் தலைவரும் முடிவு செய்வர். (குடியரசுத்தலைவர் முடிவு செய்ய இயலாது).

•    1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மக்களவைத் தலைவர் / மாநிலங்களவைத் தலைவர்களால் மேற்கொள்ளப்படும் கட்சித் தாவல் உறுப்பினர் தகுதி இழப்பு நீதி புனராய்வுக்கு உட்படும் என்கிறது.

No comments:

Post a Comment