LATEST

Monday, March 16, 2020

இந்திய பாராளுமன்றம் - உறுப்பினராவதற்கான தகுதிகள், உறுப்பினர் தகுதியிழப்பு

இந்திய பாராளுமன்றம்

உறுப்பினராவதற்கான தகுதிகள்

•    நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினர் ஆவதற்குரிய தகுதிகளை ஷரத்து 83 கூறுகிறது.
•    ஒரு நபர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
•    மாநிலங்களவைக்கு உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிறைந்தவராகவும், மக்களவைக்கு உறுப்பினரா  க தேர்ந்தெடுக்கப்பட 25 வயது நிறைந்தவராகவும் இருக்க வேண்டும்.
•     கூடுதல் தகுதிகள் பிற சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படலாம்.
 

உறுப்பினர் தகுதியிழப்பு

•    ஒருவர் இந்தியக் குடிமகனாக இல்லை என்றாலும் அல்லது ஏதேனும் வெளிநாட்டுக்கு விசுவாசியாக இருந்தாலும், அமைச்சர் பதவி அல்லது சட்டத்தால் விலக்களிக்கப்பட்ட பதவியைத் தவிர மத்திய அரசிலோ, மாநில அரசிலோ ஊதியம் பெறும் ஒரு பதவியை வகிப்பவராக இருந்தாலும், வாங்கிய கடனைத் தீர்க்காமல் திவாலாகிப் போனவராக இருந்தாலும், நீதிமன்றத்தால் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டாத்தால் வேறுவகையில் தகுதியிழப்பு செய்யப்பட்டு இருந்தாலும் அந்த நபர் நாடாளுமன்றத்தின் எந்தவோர் அவைக்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
•    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இதர தகுதி இழப்புகள்.
•    உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பது குடியரசுத்தலைவரே ஆவார். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கேட்பார்.

No comments:

Post a Comment