LATEST

Monday, March 16, 2020

இந்திய பாராளுமன்றம் - மக்களவை தேர்தல் முறை, நில அடிப்படையிலான தொகுதிகள்

இந்திய பாராளுமன்றம் 

மக்களவை தேர்தல் முறை

•    மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களில் மற்றும் யூனியன் பகுதிகளில் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதிகளில் உள்ள 18-வயது பூர்த்தியான குடிமக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
•    அறுபத்தி ஒன்றாவது அரசியலமைப்பு சீர்த்திருத்தச் சட்டம் 1988 வயது வந்தோர் வாக்குரிமையை 21ல் இருந்து 18 ஆக குறைத்தது.
 

நில அடிப்படையிலான தொகுதிகள்

•    மக்களவை உறுப்பினர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக மாநிலங்களை நில அடிப்படையிலான தொகுதிகளாக அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
•    மேலும் ஒவ்வொரு மாநிலங்களும் அதன் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட தொகுதிகளை கொண்டுள்ளன.
•    ஒவ்வொரு மாநிலமும் நில அடிப்படையில் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களின் தொகுதிகளுக்கு இடையேயும் மக்கள் தொகை விகிதாச்சாரம் சீராக இருக்குமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
•     ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்பும் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
•    அதன் அடிப்படையில் 1952, 1962, 1972, 2002ல் மறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
•    1976-ல் 42-வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மக்களவை தொகுதியை 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் படி 2000-ம் ஆண்டுகளை மாற்ற இயலாது என்று கூறியது.
•    ஆனால் 2001-ல் 84 வது அரசியலமைப்பு திருத்தம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகைப்படி உள்ள மக்களவை தொகுதிகளை 2026 ஆண்டு வரை மாற்ற இயலாது என்றது.
•    இதில் 2003-ம் ஆண்டில் 87-வது திருத்தம் மூலம் 1991-ம் ஆண்டு மக்கள் தொகை என்பதிற்கு பதிலாக 2001-ம் ஆண்டு மக்கள் தொகை என மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment