திருவள்ளுவமாலை
ஆசிரியர் குறிப்பு:
• ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
• காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும் சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.
நூல் குறிப்பு:–
• திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
• இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
• ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
• திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர்
நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”.கபிலர்.
திருவள்ளுவ மாலையிலுள்ள பாடல்கள்
கற்பனைப் படைப்புகளின் பாடல்கள்
1 அசரீரி \ சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு உருத்திரசன்மன் புலவரும் வீற்றிருக்கலாம்.
2 நாமகள் \ முன்பு நான்கு வேதங்களைப் பிரமன் வாயிலிருந்து சொன்னேன். அடுத்து பாரதம் சொன்னேன். இப்போது திருவள்ளுவர் வாயிலிருந்து திருக்குறள் சொல்கிறேன்.
3 இறையனார் \ திருக்குறள் வாடாத கற்பக மலர் போன்றது.
No comments:
Post a Comment