LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 11

பொது தமிழ் வினா விடை 11

1. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(A) அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
(B) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
(C) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
(D) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது.
Ans - (C) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
2. விடை தேர்க :
சரியான சொற்றொடரைத் தேர்க
(A) தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு 
(B) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
(C) பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு 
(D) உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
Ans - (B) பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
3. கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
(A) I மற்றும் III 
(B) II மற்றும் IV
(C) III மற்றும் IV 
(D) II மற்றும் III
Ans - (C) III மற்றும் IV
4. ‘முட்டையிட்டது சேவலா பெட்டையா’? - இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
(A) பால் வழு
(B) திணை வழு
(C) வினா வழு
(D) மரபு வழு
Ans - (C) வினா வழு
5. வரை - இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
(A) வரைதல்
(B) வரைந்த
(C) வரைந்தவன்
(D) வரைந்து
Ans - (C) வரைந்தவன்
6. பின்வருவனற்றைப் பொருத்துக :
(a) டெலிகேட் 1. கருத்துரு
(b) சாம்பியன் 2. மரபுத்தகவு
(c) புரபோசல் 3. பேராளர்
(d) புரோட்டோகால் 4. வாகைசூடி
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 3 2 1 4
(C) 3 4 1 2
(D) 2 1 4 3
Ans - (C) 3 4 1 2
7. ‘ஊ’ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
(A) இறைச்சி
(B) உலகம்
(C) உயிர்
(D) உயர்வு
Ans - (A) இறைச்சி
8. ‘து’ என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
(A) ஆறு
(B) துப்பு
(C) உண்
(D) துன்பம்
Ans - (C) உண்
9. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) சரதம் 1. நிலா முற்றம்
(b) சூளிகை 2. நாடு
(c) மகோததி 3. வாய்மை
(d) அவனி 4. கடல்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 1 3 4
(C) 3 2 1 4
(D) 1 4 3 2
Ans - (A) 3 1 4 2
10. கீழக்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள் :
(A) மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
(B) ஆசிரியரை ‘ஐயா’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
(C) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
(D) திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது
செட்டிநாட்டு மரபு
Ans - (C) அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு

No comments:

Post a Comment