LATEST

Friday, April 10, 2020

கற்காலப் பிரிவுகள் பகுதி 8

கற்காலப் பிரிவுகள்

தமிழகத்தில் கற்கால கருவிகள் கிடைக்கப்பெற்ற இடங்கள்:

பழைய கற்கால கருவிகள்:

பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுவர்

புதிய கற்காலாக் கருவிகள்:

திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தான்றிக்குடி, கொடைக்கானல் மலை.

செம்பு காலம்:

புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது. இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
•    இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
•    மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு.
•    மனித குல வரலாற்றில் உலோகத்தை உருக்கிவார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததும் உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய நிகழ்வுகளாகும்.
•    கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர். இதனால் செம்பு கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன.
•    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன.
•    பொதுவாக ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக ஹாப்பா பண்பாடு செம்பு கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
•    உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
•    தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
•    கி.மு.4300க்கும் 3200க்கும் இடைப்பட்ட செப்புக் காலத்தில் சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைத்த செராமிக் பொருட்கள் தெற்கு துருக்மெனிஸ்தான், வடக்கு ஈரான் ஆகிய பகுதிகளில் கிடைத்த செராமிக் பொருட்களுடன் ஒத்திருக்கின்றன.
•    இது இக்காலத்தில் இப்பகுதிகளிடையே குறிப்பிடத்தக்க போக்குவரத்துக்களும், வணிகமும் நடைபெற்றிருப்பதைக் காட்டுகிறது
•    செப்பு முதலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும், தகரம் மற்றும் வேறு உலோகங்களுடன் சேர்த்துக் கலப்புலோகம் ஆக்குவது விரைவாகவே தொடங்கிவிட்டது. செம்பைப் பயன்படுத்திய நாகரீகம் ஹரப்பா நாகரிகம் ஆகும்.

No comments:

Post a Comment