கற்காலப் பிரிவுகள்
புதிய கற்காலம் (Neolithic)
• புதிய கற்காலம் என்பது மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தைக் குறிக்கும்.இக்காலகட்டமே கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது இடைக்கற்காலத்தை அடுத்து வேளாண்மைத் தொழில்நுட்பத்தின் எழுச்சியுடன் உருவானது.
• வேளாண்மைப் புரட்சியை உருவாக்கிய இக்காலம் செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில் நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது.
• சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன.
• கால்நடை வளர்ப்பிலும் செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு.7000 அளவில் இவற்றுடன் மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன.
• இக்காலத்திலேயே நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின் பயன்பாடும் தோன்றின.
• இந்தியாவின் பல பகுதிகளில் புதிய கற்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் சிராண்ட், உத்திரப் பிரதேசத்தில் பீலான் சமவெளி, தக்காணத்தில் பல இடங்கள் ஆகியனவும் இதிலடங்கும்.
• தென்னிந்தியாவில் பல புதிய கற்கால வசிப்பிடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல், தமிழ்நாட்டில் பையம்பள்ளி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் உட்னூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
• புதிய கற்காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
• புதிய கற்காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்யும் முறை காணப்பட்டது.
• வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும்.
• தாவரங்களைப் பயிரிடத் தொடங்கியதாலும் பிராணிகளை வளர்த்தமையாலும் ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்ட புதிய கற்கால மக்கள் கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர்.
• கருவிகளை உருவாக்குவதிலும் மனிதனுக்குத் தேவையான சாதனங்களைப் படைப்பதிலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களை இக்காலத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. கற்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டன. வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடரிகள் பெரிதும் பயனுடையதாக இருந்தன.
• புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதிலாக களிமண் கற்களாலான குடிசைகள் அமைக்கப்பட்டன.
• மட்பாண்டங்கள் செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது.
• சமைப்பதற்கும், உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மட்பாண்டங்கள் பயன்பட்டன. இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன.
• சாகுபடி முறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில், கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்பட்டன. கிழக்கிந்தியாவில் நெல் அதிகம் பயிரிடப்பட்டது.
• செம்மறியாடுகள், ஆடுகள், மாடுகள் வளர்ப்பு பரவலாகக் காணப்பட்டது.
• பயிரிடுவதற்கும், போக்குவரத்துக்கும் கால்நடைகள் பயன்பட்டன.
• பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை புதிய கற்கால மக்கள் அணிந்தனர்.

No comments:
Post a Comment