LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 13

பொது தமிழ் வினா விடை 13

1. திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், ‘மேலகரம்’ என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், ‘குற்றாலக் குறவஞ்சியின்’ மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றலக்கியங்களில் ஒன்று
IV. ‘வசந்தவல்லி திருமணம்’ எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
(A) I மற்றும் II சரியானவை (B) III மற்றும IV சரியானவை
(C) II மற்றும் III சரியானவை (D) I மற்றும் IV சரியானவை
Ans - (A) I மற்றும் II சரியானவை
 
2. ‘மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
(A) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(B) கம்பர்
(C) குமரகுருபரர்
(D) ஒட்டக்கூத்தர்
Ans - (D) ஒட்டக்கூத்தர்
 
3. ‘ஒற்றுமைக் காப்பியம்’ என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
(A) பெரியபுராணம்
(B) மணிமேகலை
(C) கம்பராமாயணம்
(D) சிலப்பதிகாரம்
Ans - (D) சிலப்பதிகாரம்
 
4. ‘அம்மானை’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு ‘அம்மானை வரி’ என்பது பெயர்
III. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது ‘பந்து விளையாடல்’ ஆகும்
IV. அம்மானை பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும்
பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்
(A) I மற்றும் III (B) II மற்றும் I
(C) III மற்றும் IV (D) IV மற்றும் I
Ans - (B) II மற்றும் I
 
5. கடற் பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக :
(a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல் 4. அகநானூறு
நாவாய் அசைந்தது
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 4 2 1
(C) 1 2 3 4
(D) 3 4 1 2
Ans - (B) 3 4 2 1
 
6. ‘புனையா ஓவியம்’ என்பதன் பொருள்
(A) வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
(B) பூக்களால் வரைவது
(C) மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
(D) கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
Ans - (D) கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
 
7. கிருஷ்ணகிரி, கோத்தகிரி - இதில் காணப்படும் ‘கிரி’ எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
(A) கல்லிடைக் குறிச்சி
(B) பாறை
(C) மலை
(D) கோட்டை
Ans - (C) மலை
 
8. திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
i. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் ‘திருவிளையாடல் புராணம்’
ii. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
iii. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
iv. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன.
(A) i மற்றும் iii சரியானவை (B) ii மற்றும் iii சரியானவை
(C) iii மற்றும் iv சரியானவை (D) i மற்றும் iv சரியானவை
Ans - (B) ii மற்றும் iii சரியானவை
 
9. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1.தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரௌல்
(c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது ; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம்
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 3 4 2 1
(C) 3 4 1 2
(D) 4 3 2 1
Ans - (C) 3 4 1 2
 
10. பொருத்துக :
நூல் ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 1 2 3 4
Ans - (B) 2 4 1 3

No comments:

Post a Comment