LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 18

பொது தமிழ் வினா விடை 18

1. நந்திக் கலம்பத்தின் ஆசிரியர் பெயர்
(A) நந்திவர்மன்
(B) ஜெயங்கொண்டார்
(C) குமரகுருபரர்
(D) பெயர் தெரியவில்லை
Ans – (D) பெயர் தெரியவில்லை
 
2. பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) கொண்டல் 1. மாலை
(b) தாமம் 2. வளம்
(c) புரிசை 3. மேகம்
(d) மல்லல் 4. மதில்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 3 4 1 2
(C) 3 2 1 4
(D) 3 2 4 1
Ans - (A) 3 1 4 2
 
3. ‘முக்கூடற்பள்ளு’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூhப் பள்ளி ‘இளைய மனைவி’ என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலின் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல் ‘சதகம்’
(A) IV மற்றும் I (B) III மற்றும் IV
(C) I மற்றும் III (D) II மற்றும் I
Ans - (C) I மற்றும் III
 
4. ‘விற்பெருந் தடந்தோள் வீர!’
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(A) இலக்குவன்
(B) இராமன்
(C) குகன்
(D) அனுமன்
Ans - (B) இராமன்
 
5. திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
(A) நம்மாழ்வார்
(B) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(C) குலசேகராழ்வார்
(D) திருமங்கையாழ்வார்
Ans - (B) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
 
6. ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
(A) பேயனார்
(B) கபிலர்
(C) ஓதலாந்தையார்
(D) ஓரம்போகியார்
Ans - (A) பேயனார்
 
7. கீழே காணப்பெறுவனவற்றுள் எவைவ சரியற்றவை என்று கூறுக.
I. அகப்பொருள் பற்றிய, ‘நற்றிணை’ நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது.
II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
(A) I மற்றும் III சரியற்றவை (B) II மற்றும் IV சரியற்றவை
(C) III மற்றும் IV சரியற்றவை (D) I மற்றும் II சரியற்றவை
Ans - (D) I மற்றும் II சரியற்றவை
 
8. பொருந்தாத இணையினைக் காண்க:
(A) களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு
(B) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்
(C) கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் - சிலப்பதிகாரம்
(D) பண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்
Ans - (C) கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் - சிலப்பதிகாரம்
 
9. ‘திரிகடுகம்’ பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
(A) திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது
(B) திரிகடுத்தின் ஆசிரியர் நல்லாதனார்
(C) திரிகடுகத்தின் பதினெண் கீழக்கணக்கு நூல்களுள் ஒன்று
(D) சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்
Ans - (A) திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது
 
10. பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ------------- என்பதாகும்
(A) கரடி
(B) யானை
(C) முதலை
(D) பாம்பு
Ans - (D) பாம்பு

No comments:

Post a Comment