LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 17

பொது தமிழ் வினா விடை 17

1. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரிமயிர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 1 3 4
(C) 1 2 4 3
(D) 3 4 1 2
Ans - (D) 3 4 1 2
 
2. ‘இன்மையுள் இன்மை விருந்தொரால்’ - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
 (A) பண்புப்பெயர்
(B) விணையாலணையும் பெயர்
(C) பண்பாகு பெயர்
(D) வியங்கோள் வினைமுற்று
Ans - (C) பண்பாகு பெயர்
 
3. ‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
(A) அம்புஜத்தம்மாள்
(B) தில்லையாடி வள்ளியம்மை
(C) அஞ்சலையம்மாள்
(D) வேலு நாச்சியார்
Ans - (A) அம்புஜத்தம்மாள்
 
4. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க :
(A) பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது.
(B) நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்
(C) தேர், யானை, குதிரை, காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
(D) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ‘காவடிச் சிந்து’ திகழ்கிறது.
Ans - (D) நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ‘காவடிச் சிந்து’ திகழ்கிறது.
 
5. பொருத்துக :
நூல் ஆசிரியர்
(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார்
(b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன்
(d) சங்கொலி 4. கவிமணி
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 1 3 2 4
(C) 3 1 4 2
(D) 2 4 3 1
Ans - (C) 3 1 4 2
 
6. ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்று போற்றப்படுபவர்
(A) சுந்தரர்
(B) கம்பர்
(B) சேக்கிழார்
(D) மாணிக்கவாசகர்
Ans - (B) சேக்கிழார்
 
7. எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
(A) பதிற்றுப்பத்து
(B) பரிபாடல்
(C) கலித்தொகை
(D) ஐங்குறுநூறு
Ans - (B) பரிபாடல்
 
8. ‘முத்தொள்ளாயிரம்’ பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = மூத்தொள்ளாயிரம், சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ‘முத்தொள்ளாயிரம்’
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்த எழுநூறு பாடல்கள் உள்ளன.
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
(A) I, III சரியானவை (B) I, IV சரியானவை
(C) II, III சரியானவை (D) III, IV சரியானவை
Ans - (B) I, IV சரியானவை
 
9. திருக்கோட்டியூர் நம்பியால் ‘எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
(A) நாதமுனிகள்
(B) இராமாநுசர்
(C) திருவரங்கத்தமுதனார்
(D) மணவாள மாமுனிகள்
Ans - (B) இராமாநுசர்
 
10. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
(A) நற்றிணை
(B) கலித்தொகை
(C) ஐங்குறுநூறு
(D) குறுந்தொகை
Ans - (C) ஐங்குறுநூறு
 

No comments:

Post a Comment