LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 16

பொது தமிழ் வினா விடை 16

1. பொருட்டன்று – பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக.
(A) பொருட் + அன்று
(B) பொரு + அன்று
(C) பொருட்டு + அன்று
(D) பொருட் + டன்று
Ans - (C) பொருட்டு + அன்று
 
2. பொருத்துக :
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
(b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) ஓளகாரக் குறுக்கம் 3. கஃறீது
(d) மகரக் குறுக்கம் 4. கடலை
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 2 1 4 3
(C) 4 3 2 1
(D) 3 4 1 2
Ans - (D) 3 4 1 2
 
3. அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிய.
(A) மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
(B) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
(C) முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
(D) மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
Ans - (B) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
 
4. பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) விரிநகர் 1. பண்புத்தொகை
(b) மலரடி 2. வினைத்தொகை
(c) மா பலா வாழை 3. உவமைத்தொகை
(d) முதுமரம் 4. உம்மைத்தொகை
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
 (B) 2 3 4 1
(C) 3 2 1 4
(D) 2 4 3 1
Ans - (B) 2 3 4 1
 
5. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது 1. பெயரெச்சம்
(b) முக்காலத்தையும் உணர்த்துவது 2. வினைமுற்று
(c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் 3. வினையெச்சம்
(d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது 4. தொழிற்பெயர்
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 4 2 1 3
(C) 2 3 4 1
(D) 3 4 2 1
Ans - (C) 2 3 4 1
 
6. பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை தொழில்
(A) முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல்
(B) பாலை - நிரை கவர்தல், சூரையாடல்
(C) குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல்
(D) மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்
Ans - (D) மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்
 
7. அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக.
(A) அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
(B) ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
(C) கண், கண்டம், கண்டு, கண்ணி
(D) தகடு, தகழி, தகவு, தகர்
Ans - (C) கண், கண்டம், கண்டு, கண்ணி
 
8. ‘அப்பிசி மாசம் அடமள இம்பாங்க’ - இத்தொடரின் பிழை நீங்கிய வடிவம்
(A) ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
(B) ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
(C) ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
(D) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
Ans - (D) ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
 
9. கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
i. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
ii. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
iii. வேற்றுமை உருபேற்கும் போது, ‘யான்’ என்பது ‘என்’ என்றும், ‘யாம்’ என்பது ‘எம்’ என்றும்,‘நாம்’ என்பது ‘நம்’ என்றும் திரியும்
iv. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
(A) I, iii, iv சரியானவை
(B) I, ii, iii சரியானவை
(C) ii, iv, i சரியானவை
(D) iv, iii, i சரியானவை
Ans - (B) I, ii, iii சரியானவை
 
10. ‘கூவா முன்னம் இளையோன் குறுகிநீ’ கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
(A) பெயரெச்சம், வினையெச்சம்
(B) பண்புத்தொகை, பெயரெச்சம்
(C) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்
(D) வினைமுற்று, வினையெச்சம்
Ans - (C) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்

No comments:

Post a Comment