LATEST

Saturday, April 11, 2020

பொது தமிழ் வினா விடை 15

பொது தமிழ் வினா விடை 15

1. கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
(A) தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
(B) ‘திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
(C) நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்
(D) காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு.
Ans - (C) நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்
 
2. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) கவிமணி
(D) நாமக்கல் கவிஞர்
Ans - (B) பாரதிதாசன்
 
3. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
(A) புதுக்கோட்டை
(B) திருப்பெருந்துறை
(C) திருவெண்ணெய் நல்லூர்
(D) பெரியகுளம்
Ans - (B) திருப்பெருந்துறை
 
4. ‘கள்ளர் சரித்திரம்’ என்னும் உரைநடை நூலை எழுதியவர்
(A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
(B) இரா.பி.சேதுப்பிள்ளை
(C) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
(D) மு. வரதராசனார்
Ans - (A) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
 
5. “மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்” - என்று பாராட்டப்படுபவர்
(A) முடியரசன் (B) வாணிதாசன்
 (C) சுரதா (D) அப்துல் ரகுமான்
Ans - (D) அப்துல் ரகுமான்
 
6. மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
(A) தமிழிலக்கிய வரலாறு
(B) தமிழின்பம்
(C) கள்ளர் சரித்திரம்
(D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
Ans - (D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
 
7. ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என எடுத்துரைத்தவர்
(A) கண்ணதாசன்
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
Ans - (D) பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
 
8. ‘தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி’ என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) முடியரசன்
Ans - (B) வாணிதாசன்
 
9. பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
புனைபெயர் இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன் 1. செகதீசன்
(b) ஈரோடு. தமிழன்பன் 2. எத்திராஜ்
(c) வாணிதாசன் 3. முத்தையா
(d) கண்ணதாசன் 4. சொ.விருத்தாசலம்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 1 2 3
(C) 3 4 1 2
(D) 4 3 2 1
Ans - (B) 4 1 2 3
 
10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
(A) சுகம்
(B) கிள்ளை
(C) வெற்பு
(D) தத்தை
Ans - (C) வெற்பு
 

No comments:

Post a Comment