LATEST

Thursday, April 2, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 29

பொது அறிவியல் வினா விடைகள் 29

1. நீளிழை (பிளாஜெல்லா) மூலம் அசையும் விலங்கு எது?
(a) அமீபா
(b) பாராமீசியம்
(c) யுக்ளினா
(d) பறவைகள்

2. 8, 9, 10 ஆகிய விலா எலும்புகள் இணைந்து 7வது விலா
எலும்புடன் பொருந்தியுள்ளது. இவை எவ்வகை விலா எலும்புகள் ?
(a) உண்மை விலா எலும்புகள்
(b) பொய் விலா எலும்புகள்
(c) மிதக்கும் விலா எலும்புகள்
(d) தாவும் விலா எலும்புகள்

3. மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(a) 8
(b) 6
(c) 12
(d) 14

4. மனித உடம்பின் நீண்ட எலும்பு எது?
(a) கை எலும்பு
(b) தொடை எலும்பு
(c) மணிக்கட்டு எலும்பு
(d) இவற்றுள் எதுவுமில்லை

5. காதுக்க அருகில் அமைந்துள்ள சுரப்பி எது?
(a) மேலண்ண சுரப்பி
(b) கீழ்த்தாடை சுரப்பி
(c) நாவடிச் சுரப்பி
(d) இவற்றுள் எதுவுமில்லை

6. பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது
எது?
(a) நாவடிச் சுரப்பிகள்
(b) மேலண்ண சுரப்பிகள்
(c) இரைப்பை சுவர்
(d) கல்லீரல்

7. குடல் உறிஞ்சுகள் எவற்றில் காணப்படுகின்றன?
(a) ஜிஜீனம்
(b) இலியம்
(c) பெருங்குடல்
(d) சீக்கம்

8. இரத்தத்திலிருந்து கரிய மில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது
(a) தோல்
(b) கல்லீரல்
(c) நுரையீரல்
(d) சிறுநீரகம்

9. இரத்தத்தின் சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
(a) எலும்பு மஜ்ஜை
(b) கல்லீரல்
(c) மண்ணீரல்
(d) இவை அனைத்தும்

10. உடலின் ஆழத்தில் காணப்படுவது எது?
(a) சிரை
(b) தந்துகி
(c) தமனி
(d) இவற்றுள் எதுவுமில்லை

விடைகள்
1.C
2.B
3.D
4.B
5.A
6.B
7.B
8.C
9.A
10.C

No comments:

Post a Comment