LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 29

பொது தமிழ் வினா விடை 29

1. ‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” – என்று பாராட்டப்படுபவர்
(A) பாரதியார்
(B) முடியரசன்
(C) சுரதா
(D) அப்துல் ரகுமான்
Ans: – (D) அப்துல் ரகுமான்
2. திருக்குறளின் பெருமைகளைப் போற்றி ‘இணையில்லை முப்பாலுக்(கு) இந்நிலத்தே’ எனப் புகழ்ந்து பாடியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) தாரா பாரதி
Ans: - (B) பாரதிதாசன்
3. “நான் தனியாக வாழவில்லை ; தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்
(A) தனி நாயகம் அடிகள்
(B) திரு.வி.கலியாணசுந்தரம் 
 (C) மறைமலையடிகள்
(D) உ.வே.சாமிநாதர்
Ans: - (B) திரு.வி.கலியாணசுந்தரம்
4. பொருத்துக :
நூல் ஆசிரியர்
போற்றித் திருவகவல் 1. உமறுப்புலவர்
பரமார்த்த குரு கதை 2. எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
முதுமொழி மாலை 3. வேதநாயகம் பிள்ளை
பெண்மதி மாலை 4. வீரமாமுனிவர்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 1 4 2 3
(C) 3 4 1 2
(D) 3 4 2 1
Ans: - (A) 2 4 1 3
5. பொருத்துக :
நூல் ஆசிரியர்
பெத்லகேம் குறவஞ்சி 1. பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 2. ஒட்டக்கூத்தர்
ஆழகர் கிள்ளைவிடு தூது 3. தஞ்சை வேதநாயக சாத்திரியார்
தக்கயாகப்பரணி 4. குமரகுருபரர்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 4 3 1
(C) 3 4 1 2
(D) 1 3 2 4
Ans: - (C) 3 4 1 2
6. “தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு” எனக் கூறியவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 
Ans: - (D) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
7. “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்” என்று பாடிய கவிஞர்
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) கம்பர்
(D) இளங்கோவடிகள்
Ans: - (C) கம்பர்
8. ‘வீறுடைச் செம்மொழி தமிழ்மொழி, உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி’ என்று தமிழன் பெருமைகளைப் பறைசாற்றியவர்
(A) பாவலரேறு பெருஞ்சித்தரனார்
(B) பரிதிமாற் கலைஞர்
(C) அயோத்திதாசப் பண்டிதர்
(D) பாவாணர்
Ans: - (A) பாவலரேறு பெருஞ்சித்தரனார்
9. கீழுள்ள சொற்களுள் காரணப் பெயரச்ச சொல் எது?
(A) காற்று
(B) மரம்
(C) விண்
(D) முக்காலி
Ans: - (D) முக்காலி
10. குன்றேறி என்பதன் இலக்கணக் குறிப்பு
(A) ஏழாம் வேற்றுமைத் தொகை
(B) ஆறாம் வேற்றுமைத் தொகை
(C) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
(D) நான்காம் வேற்றுமைத் தொகை
Ans: - (A) ஏழாம் வேற்றுமைத் தொகை

No comments:

Post a Comment