LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 30

பொது தமிழ் வினா விடை 30

1. செயப்பாட்டு வினைத்தொடரைக் கண்டறிக.
(A) குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
(B) பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
(C) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.
(D) நான் நாளை மதுரைக்குச் செல்வேன்
Ans: - (C) உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.

2. பிழை நீக்கி எழுதுக ?
‘கண்டதைக் கூறவே’
(A) கண்டது கூறவே
(B) கண்டதை கூறவே
(C) காண்பது கூறவே
(D) கண்டதனைக் கூறவே
Ans: - (D) கண்டதனைக் கூறவே
3. நீர், நீவிர், நீங்கள் ஆகியன ----------- பெயர்கள்.
(A) முன்னிலை ஒருமை
(B) தன்மை ஒருமை
(C) முன்னிலைப் பன்மை
(D) தன்மைப்பன்மை 
Ans: - (C) முன்னிலைப் பன்மை
4. ‘ஓ’ என்ற ஒரெழுத்து ஒருமொழியின் பொருள்
(A) உயர்ச்சி
(B) தூய்மை
(C) மகிழ்ச்சி
(D) கொள்கலம்
Ans: - (C) மகிழ்ச்சி
5. அண்பல் அடிநா முடிவுறத் ------ வரும்
(A) தந
(B) பம
(C) ரழ
(D) றன
Ans: - (A) தந
6. வயிற்றுக்கும் என்பதில் வரும் உம்மை
(A) முற்றும்மை
(B) எண்ணும்மை
(C) உயர்வுச் சிறப்பும்மை
(D) இழிவுச் சிறப்பும்மை
Ans: - (D) இழிவுச் சிறப்பும்மை
7. வெண்பாவிற்குரிய ஓசை
(A) அகவல்
(B) செப்பல்
(C) தூங்கல்
(D) துள்ளல்
Ans: - (B) செப்பல்
8. கார் காலத்திற்குரிய மாதங்கள்
(A) ஐப்பசி, கார்த்திகை
(B) ஆனி, ஆடி
(C) ஆவணி, புரட்டாசி
(D) மார்கழி, தை
Ans: - (C) ஆவணி, புரட்டாசி
9. ஐந்திணை, ஐம்பால், ஐம்புலம், ஐம்பொறி இவை ------- ஆகும்.
(A) பெயர்ச் சொற்கள்
(B) வினைச் சொற்கள்
(C) தொகைச் சொற்கள்
(D) இடைச் சொற்கள்
Ans: - (C) தொகைச் சொற்கள்
10. தேன்மொழி கட்டுரை எழுதிலன் இது -------- தொடர் ஆகும்.
(A) உடன்பாட்டுத் தொடர்
(B) எதிர்மறைத் தொடர்
(C) பொருள்மாறா எதிர்மறைத்தொடர்
(D) அயற்கூற்றுத் தொடர்
Ans: - (B) எதிர்மறைத் தொடர்

No comments:

Post a Comment