LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 31

பொது தமிழ் வினா விடை 31

1. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
‘காத்திருந்து ஏமாந்து போவது’
(A) மழைமுகம் காணாப் பயிர் போல
(B) இலவு காத்த கிளி போல
(C) அனலிடைப்பட்ட புழு போல
(D) கிணற்றுத் தவளை போல
Ans: - (B) இலவு காத்த கிளி போல
2. ‘தீண்டிற்று’ என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க
(A) தீண்
(B) தீண்டி
(C) தீ
(D) தீண்டு
Ans: - (D) தீண்டு
3. இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) வஞ்சிப்பா
(D) கலிப்பா
Ans: - (A) வெண்பா
4. ‘Whats app’ என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர் ம.இராசேந்திரன் ------------------------ என மொழி பெயர்ததுள்ளார்.
(A) தூதுலாவி
(B) கட்செவி அஞ்சல்
(C) எண்ண நகலி
(D) தூது செயலி
Ans: - (B) கட்செவி அஞ்சல்
5. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை
(A) 8
(B) 10
(C) 11
(D) 12
Ans: - (C) 11
6. சரியான விடையைத் தேர்வு செய்க
(A) இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
(B) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
(C) இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
(D) இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
Ans: - (B) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
7. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்து எழுதுக.
‘கூம்பு’ என்பது -------------------- பெயர் ஆகும்.
(A) அளவுப்பண்பு
(B) சுவைப்பண்பு 
 (C) வடிவப்பண்பு
(D) நிறப்பண்பு
Ans: - (C) வடிவப்பண்பு
8. ஆற்றுவார் - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தேடு
(A) ஆற் + று + வார்
(B) ஆற் + றுவார்
(C) ஆற்று + வார்
(D) ஆ + ற்று + வார்
Ans: - (B) ஆற் + றுவார்
9. கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு
(A) சுக்கு
(B) சார்பு
(C) உண்ணு
(D) அரசு
Ans: - (C) உண்ணு
10. பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை
(A) 4
(B) 6
(C) 8
(D) 10
Ans: - (C) 8

No comments:

Post a Comment