பொது தமிழ் வினா விடை 32
1. ‘அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர்(A) ஜெயகாந்தன்
(B) அகிலன்
(C) வைரமுத்து
(D) க.சச்சிதானந்தன்
Ans: - (D) க.சச்சிதானந்தன்
2. பொருத்துக :
(a) தமிழியக்கம் 1. பாரதியார்
(b) சீட்டுக்கவி 2. தோலா மொழித்தேவர்
(c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3. பாரதிதாசன்
(d) சூளாமணி 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 2 4 1 3
(C) 3 1 4 2
(D) 4 3 2 1
Ans: - (C) 3 1 4 2
3. பொருத்துக :
நூல் புலவர்
(a) பெரியபுராணம் 1. திருத்தக்கத் தேவர்
(b) இராமாயணம் 2. உமறுப்புலவர்
(c) சீறாப்புராணம் 3. சேக்கிழார்
(d) சீவக சிந்தாமணி 4. கம்பர்
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 2 4 3 1
(C) 4 2 1 3
(D) 3 2 4 1
Ans: - (A) 3 4 2 1
4. பொருத்துக :
(a) வீரகாவியம் 1. நா.காமராசன்
(b) இயேசு காவியம் 2. சிற்பி. பாலசுப்ரமணியம்
(c) ஓளிப்பறவை 3. கண்ணதாசன்
(d) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் 4. முடியரசன்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 1 4 3
(D) 1 2 3 4
Ans: - (A) 4 3 2 1
5. எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்
(A) மாணிக்க வாசகத் தேவர்
(B) சங்கர நாராயாணர்
(C) பிலவண சோதிடர்
(D) தெய்வநாயகி
Ans: - (A) மாணிக்க வாசகத் தேவர்
6. சூடாமணி நிகண்டு - ஆசிரியர்
(A) திவாகர முனிவர்
(B) பிங்கலம்
(C) வீரமண்டல புருடர்
(D) காங்கேயர்
Ans: - (C) வீரமண்டல புருடர்
7. ‘மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா”
- இக்கூற்று யாருடையது?
(A) பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
(B) பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை
(C) பேராசிரியர் சாலை.இளந்திரையன்
(D) பேராசிரியர் சாலமன் பாப்பையா
Ans: - (A) பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
8. பொருத்துக :
(a) மூதுரை 1. சிவப்பிரகாசர்
(b) வெற்றிவேற்கை 2. முனைப்பாடியர்
(c) நன்னெறி 3. அதிவீரராம பாண்டியர்
(d) அறநெறிச்சாரம் 4. ஓளவையார்
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 2 3 1 4
(C) 3 4 2 1
(D) 4 1 2 3
Ans: - (A) 4 3 1 2
9. ‘மத்தவிலாசம்’ – என்னும் நாடக நூலை எழுதியவர்
(A) இராஜ இராஜ சோழன்
(B) இராஜேந்திர சோழன்
(C) நந்திவர்மன்
(D) மகேந்திரவர்மன்
Ans: - (D) மகேந்திரவர்மன்
10. பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
(A) குடும்ப விளக்கு
(B) பாண்டியன் பரிசு
(C) இருண்ட வீடு
(D) கள்ளோ காவியமோ
Ans: - (D) கள்ளோ காவியமோ
No comments:
Post a Comment