LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 33

பொது தமிழ் வினா விடை 33

1. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
எனும் பாடலடிகள் இடம் பெற்ற நூல்
(A) குறுந்தொகை
(B) புறநானூறு
(C) பதிற்றுப்பத்து
(D) பத்துப்பாட்டு
Ans: -(B) புறநானூறு
2. “மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை
(A) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
(B) நீதி இலக்கியம் 
 (C) பக்தி இலக்கியம்
(D) இக்கால இலக்கியம்
Ans: - (A) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
3. ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
(A) இரண்டாம் இராசராசன்
(B) இராசேந்திரன்
(C) குலோத்துங்கள்
(D) கிள்ளி வளவன்
Ans: - (A) இரண்டாம் இராசராசன்
4. சரியான விடையைத் தேர்ந்தெடு
பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ------------- என்பர்
(A) இடம்பெயர்தல்
(B) புலம் பெயர்தல்
(C) வலசை போதல்
(D) ஊர் விட்டு ஊர் செல்லல்
Ans: - (C) வலசை போதல்
5. சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
(A) தொண்ணூறு
(B) தொண்ணூற்றேழ
(C) நூறு
(D) ஐம்பது
Ans: - (B) தொண்ணூற்றேழ
6. நவ்வி’எனும் சொல்லின் பொருள்
(A) மான்
(B) நாய்
(C) நரி
(D) செந்நாய்
Ans: - (A) மான்
7. தமிழில் காணும் முதல் சித்தர்
(A) திருமூலர்
(B) அருணகிரிநாதர்
(C) தாயுமானவர்
(D) வள்ளலார்
Ans: - (A) திருமூலர்
8. பொருத்துக :
(a) வண்டு 1. குனுகும்
(b) புறா 2. அலப்பும்
(c) பூனை 3. முரலும்
(d) குரங்கு 4. சீறும்
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2 
 (B) 1 2 4 3
(C) 2 4 3 1
(D) 4 3 2 1
Ans: - (A) 3 1 4 2
9. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை
(A) ஈ.வெ.ரா. மணியம்மை
(B) கஸ்தூரிபாய்
(C) வேலுநாச்சியார்
(D) தில்லையாடி வள்ளியம்மை
Ans: - (D) தில்லையாடி வள்ளியம்மை
10. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(A) 10
(B) 20
(C) 30
(D) 40
Ans: - (C) 30

No comments:

Post a Comment