LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 34

பொது தமிழ் வினா விடை 34

1. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
(A) யசோதர காவியம்
(B) நாககுமார காவியம்
(C) உதயகுமார காவியம்
(D) வளையாபதி
Ans: - (D) வளையாபதி
2. “செல்வத்துப் பயனே ஈதல்”- எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்
(A) திருக்குறள்
(B) பரிபாடல்
(C) பதிற்றுப்பத்து
(D) புறநானூறு
Ans: - (D) புறநானூறு
3. ‘தேவார மூவர்’ எனப்படுவோர்
(A) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
(B) அப்பர், கந்தரர், மணிவாசகர்
(C) நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
(D) சம்பந்தர், அப்பர், சுந்தரர்
Ans: - (D) சம்பந்தர், அப்பர், சுந்தரர்
4. “ஊக்கம் உடையான் ஒடுக்கம்’- எதைப் போன்றது
(A) பதுங்கும் புலி
(B) வளைந்து நிற்கும் வில்
(C) பின்வாங்கி நிற்கும் ஆடு
(D) சீறும் பாம்பு
Ans: - (C) பின்வாங்கி நிற்கும் ஆடு
5. ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ எனப் போற்றப்படும் நூல்
(A) கம்பராமாயணம்
(B) சிலப்பதிகாரம் 
 (C) திருக்குறள்
(D) நாலடியார்
Ans: - (C) திருக்குறள்
6. ஞாலத்தின் மாணப் பெரிது
(A) எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
(B) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
(C) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
(D) பயனை எதிர்பாராமல் செய்த உதவி
Ans: - (C) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
7. “பரணிக்கோர் சயங்கொண்டான்”
என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
(A) பலபட்டடைச் சொக்கநாதர்
(B) குமரகுருபரர்
(C) தாயுமானவர்
(D) இராமலிங்கர்
Ans: - (A) பலபட்டடைச் சொக்கநாதர்
8. ‘’உலா’ எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
(A) கலிவெண்பா
(B) ஆசிரியப்பா
(C) விருத்தப்பா
(D) வஞ்சிப்பா
Ans: - (A) கலிவெண்பா

9. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக.
(A) நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
(B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
(C) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
(D) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்
Ans: - (B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
10. பருப்பு உள்ளதா? - இது எவ்வகை வினா?
(A) கொளல் வினா
(B) கொடை வினா
(C) ஐய வினா
(D) ஏவல் வினா
Ans: - (A) கொளல் வினா

No comments:

Post a Comment