LATEST

Friday, April 10, 2020

கற்காலப் பிரிவுகள் பகுதி 4

கற்காலப் பிரிவுகள்

நடு பழையகற்காலம்

•    நடு பழையகற்காலம் (Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300,000 இருந்து 30,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும்.
•    உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். 
நடு பழையகற்காலத்தை தொடர்ந்து, மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும்.

மேல் பழையகற்காலம்

•    35,000 தொடக்கம் 10,000 ஆண்டுக் காலத்துக்கு முன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட அனித இனங்களில், குரோ-மக்னன்களதும், நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன.
•    சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின.
•    கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர்.
•    இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
•    13,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
•    பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும், வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment