LATEST

Monday, April 13, 2020

பொது தமிழ் வினா விடை 58

பொது தமிழ் வினா விடை 58

1. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
(A) பேச்சுக்கலை
(B) ஓவியக்கலை
(C)இசைக்கலை
(D) சிற்பக்கலை
ANS - (A) பேச்சுக்கலை

2. ‘என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
(A) சமுதாயமலர்
(B) காந்திமலர்
(C) தேசியமலர்
(D) இசைமலர் 
ANS - (C) தேசியமலர்

3. ‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
(A) பாரதி
(B) சுரதா
(C) பாரதிதாசன்
(D) கவிமணி
ANS - (C) பாரதிதாசன்

4. அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
(A) சென்னை
(B) மதுரை
(C) சிதம்பரம்
(D) தஞ்சை
ANS - (A) சென்னை

5. ‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
(A) ஈராஸ் பாதிரியார்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு.போப்
(D) வீரமாமுனிவர்
ANS - (A) ஈராஸ் பாதிரியார்

6. நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
(A) பூநாரை
(B) அன்னம்
(C) கொக்கு
(D) குருகு
ANS - (A) பூநாரை
7. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்
(A) கம்பதாசன்
(B) வாணிதாசன்
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்
ANS - (B) வாணிதாசன்

8. ‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?
(A) பம்மல் சம்பந்தனார்
(B) சங்கரதாசு சுவாமிகள்
(C) கவிமணி
(D) பரிதிமாற்கலைஞர்
ANS - (C) கவிமணி

9. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
(A) 1830
(B) 1840
(C) 1810
(D) 1820
ANS - (A) 1830 

10. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
(A) “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
(B) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
(C) “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
(D) “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
ANS - (B) “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”

No comments:

Post a Comment