LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 60

பொது தமிழ் வினா விடை 60

1. கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது? 
I. சிங்கம் முழங்கும்
II.பூனை கீச்சிடும்
III.புறா குனுரும்
IV.வண்டு முரலும்
(A) I மற்றும் II சரி

(B) III மற்றும் IV சரி
(C) I, III மற்றும் IV சரி
(D) II, III மற்றும் IV சரி
Ans - (C) I, III மற்றும் IV சரி

2. கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை
(A) சிந்துவிருத்தம்
(B) கட்டளை கலித்துறை
(C) ஆசிரியவிருத்தம்
(D) கலித்தாழிசை
Ans - (D) கலித்தாழிசை

3. கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
(A) காக்கைப்பாடினியார்
(B) காரைக்காலம்மையார்
(C) வெள்ளி வீதியார்
(D) நப்பசலையார்
Ans - (C) வெள்ளி வீதியார்

4. உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே
-இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) பரிபாடல்
Ans - (A) புறநானூறு

5. “…. சிறு புல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்
(A) கபிலர்
(B) கம்பர்
(C) ஒளவையார்
(D) பரணர்
Ans - (A) கபிலர்

6. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
(A) 100
(B) 105 
(C) 107
(D) 110
Ans - (C) 107

7. “வருகைப் பருவம்” – என்பது
(A) குழந்தையின் பத்தாம் திங்களில் நிகழ்வது
(B) குழந்தையின் பனிரண்டாம் திங்களில் நிகழ்வது
(C) குழந்தையின் இருபதாம் திங்களில் நிகழ்வது
(D) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது
Ans - (D) குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது

8. ‘உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே’
- என்று தொடங்கும் பாடல் எந்தப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
(A) செங்கீரைப்பருவம்
(B) முத்தம் பருவம்
(C) வருகைப்பருவம்
(D) அம்புலிப்பருபம்
Ans - (C) வருகைப்பருவம்

9. உமறுப்புலவரின் காலம்
(A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
(B) கி.பி. பதினேழாம் நூற்றாண்டு
(C) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
(D) கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு
Ans - (B) கி.பி. பதினேழாம் நூற்றாண்டு

10. “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ------------------------ காதையாக உள்ளன.
(A) இருபதாவது
(B) இருபத்து நான்காவது
(C) இருபத்தேழாவது
(D) இருபத்தொன்றாவது
Ans - (B) இருபத்து நான்காவது

No comments:

Post a Comment