LATEST

Wednesday, April 15, 2020

பொது தமிழ் வினா விடை 61

பொது தமிழ் வினா விடை 61

1. சரியான பொருள் தருக.
‘ஆயம்’
(A) செவிலியர் கூட்டம்
(B) பாணன் கூட்டம்
(C) தோழியர் கூட்டம்
(D) அனைத்தும்
Ans - (C) தோழியர் கூட்டம்

2. தெய்வக் கவிஞர் என்றால் ----------------------- என்று பொருள்படும்.
(A) திவ்வியகவி
(B) அழகியமணவாளதாசர்
(C) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(D) குமரகுருபரர்
Ans - (A) திவ்வியகவி 

3. மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?
(A) உலா
(B) அந்தாதி
(C) கலம்பகம்
(D) பரணி
Ans - (C) கலம்பகம்

4. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) மேதி - எருமை
(B) கேசரி - சிங்கம்
(C) எண்கு - புலி
(D) மரை - மான்
Ans - (C) எண்கு - புலி

5. பொருந்தாத தொடரைக் கண்டறிக.
(A) இழிந்த பிறப்பாய் விடும்
(B) பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
(C) ஏதம் படுபாக் கறிந்து
(D) செல்வத்துப் பயனே ஈதல்
Ans - (D) செல்வத்துப் பயனே ஈதல்

6. “வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்” – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
(A) நக்கீரர்
(B) இளங்கீரனார்
(C) பெருங்குன்றூர்க்கிழார்
(D) நப்பசலையார்
Ans - (B) இளங்கீரனார்

7. “வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) பேயனார்
(C) ஓரம்போகியார்
(D) ஓதலாந்தையார்
Ans - (D) ஓதலாந்தையார்

8. ---------------------------- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் ஆவார்.
(A) சேர
(B) சோழ
(C) பாண்டிய
(D) பல்லவ
Ans - (A) சேர

9. அகநானூற்றில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை
(A) புhலை
(B) குறிஞ்சி
(C) நெய்தல்
(D) மருதம் 
Ans - (D) மருதம்

10. நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்
(A) பதிமூன்று
(B) முப்பத்து மூன்று
(C) பதினொன்று
(D) நூறு
Ans - (B) முப்பத்து மூன்று

No comments:

Post a Comment