திருக்குறள் - அன்புடைமை - குறள் 71 & 72 - பொருளும் விளக்கமும்
புன்கணீர் பூசல் தரும்.
பொருள்: அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே நம் அன்பு கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
மு.வ விளக்க உரை: அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்
சாலமன் பாப்பையா விளக்க உரை: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
கலைஞர் விளக்க உரை: உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்
72. அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள்: அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என்னு எண்ணுவர் அன்பு எடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
மு.வ விளக்க உரை: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
சாலமன் பாப்பையா விளக்க உரை: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
கலைஞர் விளக்க உரை: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
No comments:
Post a Comment