பொது தமிழ் வினா விடை 79
1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?(A) அகவலோசை
B) தூங்கலோசை
(C) செப்பலோசை
(D) துள்ளலோசை
ANS: (C) செப்பலோசை
2. “ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) முதுமொழிக் காஞ்சி
(B) ஏலாதி
(C) இனியவை நாற்பது
(D) இன்னா நாற்பது
ANS: (A) முதுமொழிக் காஞ்சி
3. ‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
(A) அன்புடையோர்
(B) அறிவு முதிர்ச்சியுடையோர்
(C) ஆர்வமிகு நண்பர்கள்
(D) உற்றார்
ANS: (B) அறிவு முதிர்ச்சியுடையோர்
4. “புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு ------------------------------
- குறளினை நிறைவு செய்க
(A) அன்பு இலவர்க்கு
(B) மரம்தளிர்த் தற்று
(C) அஃதே துணை
(D) இயைந்த தொடர்பு
ANS: (A) அன்பு இலவர்க்கு
5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
(A) சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
(B) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
(C) இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
(D) சுpறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
ANS: (B) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
6. ‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்
(A) நற்றிணை
(B) பரிபாடல்
(C) குறுந்தொகை
(D) பதிற்றுப்பத்து
ANS: (C) குறுந்தொகை
7. சரியான விடையக் கண்டுபிடி
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
(A) கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
(B) முனுசாமி, மங்களம்
(C) வெங்கட்ராமன், அம்மணி
(D) நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
ANS: (B) முனுசாமி, மங்களம்
8. “அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட,
தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே
தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?
(A) பாரதியார்
(B) சுந்தரம் பிள்ளை
(C) கவிமணி
(D) பாரதிதாசன்
ANS: (B) சுந்தரம் பிள்ளை
9. கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை -----------------------------
(A) தூதுவளை
(B) துளசி
(C) அகத்திக்கீரை
(D) கீழாநெல்லி
ANS: (A) தூதுவளை
10. ‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்
(A) பாரதியார்
(B) அதிவீரராம பாண்டியர்
(C) பாரதிதாசன்
(D) ஒளவையார்
ANS: (D) ஒளவையார்
No comments:
Post a Comment