LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 87

பொது அறிவியல் வினா விடைகள் 87

1. வேதி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?
(A) பசும் கந்தக பாக்டீரியா
(B) ஊதா கந்தக பாக்டீரியா
(C) கஸ்குட்டா
(D) நைட்ரோசோமோனாஸ்
 
2. மட்குண்ணி வகை ஊட்டமுறைக்கு எ.கா. எது?
(A) சாந்தோமானாஸ்சிட்ரி
(B) செர்க் கோஸ்போராபெர்சரேட்டா
(C) கஸ்குட்டா
(D) மியூக்கர்
 
3. உறிஞ்சு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) ஹால்டோரியாக்கள்
(B) ஓம்புயிரிகள்
(C) ஒட்டுண்ணிகள்
(D) மட்குண்ணிகள்
 
4. அம்மையார் கூந்தல் என அழைக்கப்படுவது எது?
(A) பெர்சனேட்டா
(B) கஸ்குட்டா
(C) மானாட்ரோபா
(D) மியூக்கர்
 
5. கூட்டுயிரி உணவூட்ட முறைக்கு எ.கா. எது?
(A) மியூக்கர்
(B) நாய்க்குடை
(C) மானாட் ரோபா
(D) மைக்கோ ரைசா
 
6. பூச்சி உண்ணும் தாவரம் அல்லாதது எது?
(A) நெப்பந்தஸ்
(B) ரைசோபியம்
(C) ட்ரசிரா
(D) யுட்ரிகுலேரியா
 
7. வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர
உறுப்பு வளைதல் ------ எனப்படும்.
(A) ஒளி சார் பசைவு
(B) புவி சார் பசைவ
(C) வேதி சார் பசைவு
(D) நீர் சார் பசைவு
 
8. வெண்டைக்காயின் தாவரவியல் பெயர் என்ன?
(A) ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
(B) அகேசியா காக்சினியா
(C) சிட்ரஸ் சைனென்சிஸ்
(D) கோக்கஸ் நியூசி ஃ பெரா
 
9. கலோட்ரோபிஸ் ஜைஜென்டியா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) பலா
(B) சீதாப் பழம்
(C) பருத்தி
(D) எருக்கு
 
10. கோக்கஸ் நியூசிஃபெரா என்பது எதன் பொதுப் பெயர்?
(A) சாத்துக்குடி
(B) பலா
(C) பருத்தி
(D) தென்னை
 
விடைகள்
1.D 
2.D 
3.A 
4.B 
5.D
6.B 
7.C 
8.A 
9.D 
10.D
 

No comments:

Post a Comment