LATEST

Saturday, April 4, 2020

பொது அறிவியல் வினா விடைகள் 90

பொது அறிவியல் வினா விடைகள் 90

1. பெப்போ வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) ஆப்பிள்
(B) ஆரஞ்சு
(C) வெள்ளரி
(D) மா
 
2. போம் வகை சதைப் பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) தக்காளி
(B) ஆப்பிள்
(C) ஆரஞ்சு
(D) மா
 
3. பெர்ரி வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
(A) ஆரஞ்சு
(B) ஆப்பிள்
(C) வெள்ளரி
(D) தக்காளி
 
4. பார்த்தினோ கார்பிக் கனிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) கருவுற்ற கனிகள்
(B) கருவுறாக் கனிகள்
(C) உலர் வெடி கனிகள்
(D) பிளவுக் கனிகள்
 
5. கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப்
பிரியும் இந்த பாகங்களுக்கு ------- என்று பெயர்?
(A) பார்த்தினோ கார்ப்
(B) மெரிகார்ப்
(C) முதிர்ந்த சூற்பை
(D) முதிர்ந்த மகரந்தப்பை
 
6. இரண்டு ஆண்கேமீட்டுகளில் ஒன்று அண்டத்துடனும்,
மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது -------
எனப்படுகிறது?
(A) மூவினைவு
(B) உற்பத்தி பெருக்கம்
(C) இரட்டைக் கருவுறுதல்
(D) இவற்றுள் எதுவுமில்லை
 
7. நீரின் வழி மகரந்தச் சேர்க்கை எதில் நடைபெறுகிறது?
(A) வாலீஸ்நேரியா
(B) மக்காச்சோளம்
(C) எருக்கு
(D) வாழை
 
8. பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
(A) எண்டமோஃபிலி
(B) சூஃபிலி
(C) ஆர்னித் தோஃ பிலி
(D) ஹைடிரோஃ பிலி
 
9. பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
(A) எண்டமோஃபிலி
(B) சூஃபிலி
(C) ஆர்னித் தோஃ பிலி
(D) ஹைடிரோஃ பிலி
 
10. மலரின் ஆண் பாகம் எது?
(A) புல்லி வட்டம்
(B) அல்லி வட்டம்
(C) மகரந்தத்தாள் வட்டம்
(D) சூலக வட்டம்
 
விடைகள்
1.C 
2.B
3.D 
4.B 
5.B
6.C
7.A 
8.C 
9.A 
10.C

No comments:

Post a Comment