LATEST

Wednesday, January 12, 2022

பௌத்தசமயம் - 15 Mints Seminar Notes

 பௌத்தசமயம் - 15 Mints Seminar Notes


  • கௌதமபுத்தர் என்பவர் கி.மு 563 க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். 
  • இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.   
  • இவர்கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத்தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
  • இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கியமுனி" என்றும் அழைக்கப்பட்டார்.

சித்தார்த்த கௌதம புத்தர்

  • பிறப்பு: கிமு 563 அல்லது 480 லும்பினி, நேபாளம்
  • இறப்பு:கிமு 483 அல்லது 400(வயது 80)குசிநகர், உத்தரப்பிரதேசம், இந்தியா
  • புத்தர்: பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார்
  • முன்னிருந்தவர்: காசாபாபுத்தர்
  • பின்வந்தவர்:மைத்ரேயாபுத்தர்
  • பெற்றோர்:சுத்தோதனர் – மாயா
  • வாழ்க்கைத்துணை:யசோதரை
  • பிள்ளைகள்:ராகுலன்

புத்தரின் மற்ற பெயர்கள்

•ததாகதர்

சித்தார்த்தர்    

  • சமசுகிருத மொழியில் கௌதம புத்தரைத தாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல்தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள்படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். 
  • புத்தர் பிறவிச் சுழற்சியைகடந்து சென்றவர் என்ற காரணத்தைக் கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
  • சித்தார்த்தர், மெய்ஞானம்பெற்றது "புத்தர்" அல்லது ஒளி பெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கியவம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால்அழைக்கப்பட்டார்.
  • "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாணநிலை" என்றுரைப்பர்.

சித்தார்த்தர்

  • சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மேமாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். 
  • மாயா இவரதுதாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்தஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். 
  • இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளையானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. 
  • கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகா பிரஜாபதி கௌதமி வளர்த்தார்.
  • சித்தார்த்தர், தனது 16 வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர்ராகுலன். 
  • சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர்தந்தை ஏற்படுத்தித்தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
  • அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காணநேர்ந்தது. அவை;
  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  2. ஒரு நோயாளி
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  4. நாலாவதாக ஒரு முனிவன்
  • எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதிகௌதமி வளர்த்தார்.
  • தனது 35ஆம்வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்து விட்டு போதிமரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞானநிலை அடையும்வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். 
  • ஒருவாரம் தனது மிகநுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும்உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார்.
  • இந்நிலையே ததாகதர்நிலை என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்தநிலையை உணர்ந்துகொண்டார். 
  • புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்தமதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
  • அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர்.


புத்தரின்சீடர்கள்
புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
1.    சாரிபுத்திரர்
2.    மௌத்கல்யாயனர்
3.    மகாகாசியபர்
4.    சுபூதி
5.    பூரணர்
6.    காத்தியாயனர்
7.    அனுருத்தர்
8.    உபாலி
9.    ராகுலன்
10.    ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும் கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர்.


        

                                

Presented By,

Ashok kumar

TNPSC Student

Magme School Of Banking

No comments:

Post a Comment