LATEST

Wednesday, January 12, 2022

பிற்கால மௌரிய பேரரசு - 15 Mints Seminar Notes

 பிற்கால மௌரிய பேரரசு - 15 Mints Seminar Notes

  • வடக்குசுங்கர்கள் ,கன்வர்கள்
  • வடமேற்கு இந்தோ- கிரேக்கர்கள், சாகர்கள், பார்த்தியர்கள், குஷானர்கள்
  • தெற்கு சாதவாகனர்கள்
  • கலிங்கம் சேடிகள்

சான்று
  • தனதேவனின் அயொத்தி கல்வெட்டு
  • மோகா (தட்சசீலம்கல்வெட்டு) 

நாணயங்கள்

  • சாதவாகனரின் நாணயங்கள்
  • ரோமானிய நாணயங்கள்

இலக்கியங்கள்

  • புராணங்கள்
  • கார்கிசம்கிதா
  • பாணபட்டரின் ஹர்ஷசரிதம்

அயல் நாட்டவரின் குறிப்பு

  • சீன பௌத்த துறவியுவான் சுவாங்கின் பயனக்குறிப்பு

வடக்கு சுங்கர்களும், கன்வர்களும்

  • மெளரியப் பேரரசின் கடைசி மன்னர் பிரிகத்ரதா
  • படைத்தளபதி புஷ்யமித்ரசுங்கர்
  • இவர் பிரிகத்ரதாவை கொன்று சுங்கர்களின் ஆட்சியை நிறுவினார்
  • சுங்கர்களின் முதல் மன்னர் புஷ்யமித்ரசுங்கர்
  • இவர் வேதத்தை மிகவும் பின்பற்றினார்
  • ஆகையால் வைணவம் மிக வேகமாக வளர்ந்தது
  • இவரது மகன் அக்னிமித்ரா
  • காளிதாசர் இயற்றிய மாளவிகா அக்னி மித்ராவின் கதாநாயகன் இவரே
  • சுங்கர்களின் கடைசி மன்னர் தேவபூதி
  • இவரது அமைச்சர் வாசுதேவகன்வர்
  • சுங்கர்கள் காலத்தில் கங்கை பள்ளதாக்கு பாதுகாக்கபட்டது
  • சுங்கர்கள் காலத்தவர் ,கலிங்கத்தை ஆண்டகார வேலர்
  • காரவேலர் பற்றிய குறிப்புகள் ஹதிகும்பா கல்வெட்டில் காணப்படுகிறது.

கன்வர்கள்

  • வாசுதேவகன்வர், தேவபூதி மன்னரை கொன்று கன்வர் ஆட்சியை நிறுவினார்
  • இவர்கள் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்தனர்
  • நான்கு அரசர்கள் மட்டுமே கன்வர்களின் ஆட்சி ஆண்டனர்
  • அவர்கள், வாசுதேவன், பூமிமித்ரர், நாரயணர், சுசர்மன்
  • 45 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்
  • தெற்கில் ஆந்திராவை சிமுகா என்ற மன்னர் ஆட்சி செய்து கொண்டருந்தார்.
  • இவர்கன்வருள் கடைசி மன்னரான சுசர்மனை வீழ்த்தி சாதவாகனர்கள் ஆட்சியை நிறுவினார்.

தெற்கில் சாதவானர்கள்

  • தென் இந்தியாவில் சாதவாகனர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர்
  • இவர்கள் 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்
  • இதில் சி முகா 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார்
  • இவரது சகோதரர் கிருஷ்ணன் மற்றும் சதகர்னியும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்
  • இவர்கள் காலத்தில் சாதவாகனர்களின் அரசுபேரரசானது
  • வடமேற்கில் ராஜஸ்தான் முதல் கிழக்கே கலிங்கம் வரை ஆட்சி செய்தனர்
  • இதில் கௌதமிபுத்திர சதகர்ணியர் மாபெரும் மன்னராவர்
  • இவர் இந்தோகிரேக்கர், பார்த்தியர்களை கொன்றார்
  • இவர்கள் கப்பல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களை பயன்படுத்தியுள்ளனர்
  • இதன் மூலம் இவர்கள் கடல் படையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது

இலக்கியம்

  • ஹாலா ஒரு சமஸ்கிருத அறிஞர் ,இவர் 700 பாடல்களை பாடியுள்ளார்.
  • இவர் கி.மு 2 நூற்றாண்டு
  • பாமியன் பள்ளத்தாக்கில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளது இத அன்மையில் தாலிபான்களால் வெடித்து சிதறடிக்கப்பட்டது

சாகர்கள்

  • இவர்கள் நாடோடி இனத்தவர்கள் (ஈரானியசித்தியர்கள்)
  • மோகா என்பவரால் இவர்கள் ஆட்சி நிறுவப்பட்டது
  • இவர்களது தலைநகரம் சிர்காப்
  • முக்கியமான மன்னர் ருத்ரதாமன் ஆவார்

குஷானர்கள்

  • இவர்கள் சீனாவின் வடமேற்கு பகுதியில் வாய்ந்தயூச். சிபழங்குடியினரை சேர்ந்தவர்கள்
  • இவர்களுள் முக்கியமானவர் கனிஷ்கர்
  • காபூலை தலைநகராக கொண்டருந்தனர் பின்னர் புருஷபுரத்தை தலைநகராக கொண்டனர்
  • கனிஷ்கர் கி.பி 78ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • இவர் முதலில் காஷ்மீரை கைப்பற்றினார்
  • அங்கு கனிஷ்காபுரம் என்னும் நகரை உருவாக்கினார்
  • இவர் நான்காம் புத்த மாநாட்டை ஶ்ரீ நகருக்கு அருகிலுள்ள குந்தலவனத்தில்  நிறுவினார் எனவே இவரை இரண்டாம் அசோகர் என்பர்
  • இதில்புத்தமதம் , மகாயானம் , ஹீனயானம் என்று இரண்டானது
  • இவர்களது ஆட்சி வாரணாசி முதல் பாரசீகம் வரை இருந்தது
  • அரச மதமாக பௌத்த மதத்தை அறிவித்தனர



Presented By,

Niraimathi

Tnpsc Student

Magme School Of Banking





No comments:

Post a Comment