ஒளி - 15 Mints Seminar Notes
- காட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை மின்காந்த ஆற்றல்
ஒளி மூலங்கள்
- எந்தெந்த பொருள்கள் எல்லாம் நமக்கு ஒளியை தருகின்றனவோ அவற்றை ஒளி மூலங்கள் என்கிறோம் ex.சூரியன்
ஒளிக்கதிர்
- ஒளிசெல்லும் திசையைக் குறிக்கும் ஒரு கோடு
பொருள்களை பார்க்க தேவைபடுவன
1.ஒளிமூலம்
2.பொருள்
3.பொருளிலிருந்து ஒளியை கண்டுணர கண்கள்
ஒளி ஊடுருவும் பொருட்கள்
- தன்வழியே ஒளியை செல்ல அனுமதிக்கும் பொருட்கள்
Ex.தூயநீர்
ஒளிகசியும் பொருட்கள்
- ஒருபகுதி ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கும் பொருட்கள்.
Ex.பனிமூட்டம்.தூசி நிறைந்த காற்று
ஒளி புகாப்பொருட்கள்
- தன்வழியே ஒளி ஊடுருவ அனுமதிக்காத பொருட்கள்
Ex.மரக்கதவு
· ஒளிபுகாபொருட்கள் மட்டுமே நிழல்களை உருவாக்கும்
சந்திரகிரகணம்
· சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருவதால் சந்திரகிரகனம் ஏற்படும்
· இது பௌர்ணமி அன்று நிகழ்கிறது.
சூரியகிரகணம்
· சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது
· இது அமாவாசை அன்று நிகழ்கிறது
எதிரொளிப்பு விதிகள்
1.படுகோணம்,எதிரொளிப்பு கோணமும் சமம்
2.படுகதிர்.எதிரொளிப்பு கதிர் படுபுள்ளிக்கு வரையப்பட்ட குத்துகோடு ஆகியவை மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன.
சமதள ஆடி
· சமதலஎதிரொலிக்கும் பரப்பை உடைய ஆடி.
குழி ஆடி
· உள்பகுதியில் எதிரொலிக்கும் பகுதியாகவும் அல்லது வெளிப்பகுதி வெள்ளி பூசப்பட்ட கோளத்தின் ஒரு பகுதி
குவி ஆடி
1ஆடி மையதிற்கும்.முக்கியகுவியதிற்கும் இடையே உள்ள தூரம்.
· 2. இது வளைவு ஆரத்தில் பாதி அளவு இருக்கும்உள்பகுதி வெள்ளி பூசபட்டோ அல்லது வெளிப்பகுதி எதிரொலிக்கும் தன்மை உடையதாக உள்ள ஒரு கோளத்தின் ஒரு பகுதி.
குவியத்தொலைவு
1.ஆடி மையதிற்கும்.முக்கியகுவியதிற்கும் இடையே உள்ள தூரம்.
2. இது வளைவு ஆரத்தில் பாதி அளவு இருக்கும்
பெரிஷ்கொப்
- · இருசமதள ஆடிகளால் தொடர்ந்து எதிரொளிப்பு அடைவதே இதன் தத்துவம்
- · ஒரு பொருளை சுற்றியுள்ள அல்லது அதன் மேல்பகுதியில் உள்ள பொருள்களை பார்பதற்கு பயன்படும் கருவி.
ஒளிவிலகல்
· ஓர்ஒளிபுகும் ஊடகதிலிருந்து மற்றொரு ஒழிபுகும் ஊடகத்திற்கு ஒளி சாய்வாக செல்லும்போது ஏற்படும் பாதை விலகல்.
ஒளி விலகளின் முதல் விதி
· ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில்இருந்துமற்றொரு ஊடகத்திற்கு செல்லும் படுகாதிர்.விலகுகதிர்.படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்கு செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
ஒளி விலகலின்இரண்டாம் விதி
· ஒளிக்கதிர் ஓர் ஊடகத்தில்இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது படுகோனதின் சைன் மதிப்பிற்கும்,விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயுள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம்.
· இது ஸ்நெல்விதி என்றும் அழைக்கப்படும்.
ஒளி விலகல் எண்
· காற்றின் ஒளியின் திசை வேகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகாத்திருக்கும் இடையேயுள்ள தகவு.
ஒளி நிறப்பிரிகை
· வெண்மை நிற ஒளியானது ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே செல்லும் போது 7வண்ணமாக பிரிகை அடையும் நிகழ்வு.
எதிரொலித்தல்
· பளபள மென்மையான பொலிவான பரப்பில் ஒளிக்கதிர்கள் பட்டு திரும்பும் நிகழ்வு எதிரொலித்தல் எனப்படும்.
கண்ணாடி எதிரொளிப்பு
· எதிரொளிப்பு விதிகளை பின்பற்றி தெளிவான பிம்பதினை உருவாக்கும் எதிரொளிப்பு.
பரவலான எதிரொளிப்பு
· எதிரொளிப்பு விதிகளை பின்பற்றாமல் தெளிவான பிம்பதினையும் உருவாக்காமல் இருக்கும் எதிரொளிப்பு
கெலடைஷ்கோப்
· எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கும் கருவி
லென்சின்திறன்
· ஒளி குவிக்கபடும் அல்லது விரிக்கபடும் அளவு லென்சின் திறனால் குறிக்கப்படும்.
· இதன் அலகு டயாப்டர்.
· குவி லென்சின் திறன் நேற்குறி உடையது
· குழி லென்சின் திறன் எதிற்குறி உடையது.
கிட்டப்பார்வை
· மையோபியா என்பது கிட்டப்பார்வை எனப்படும்.
· தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க முடியாது.
· கிட்டப்பார்வை உடையவரின் கண்ணில் தொலை பொருளின்பிம்பம் விலிதிதிரைக்கு முன்பாகவே குவிக்கபடுகிறது.
· கிட்டப்பார்வை குழி லேன்சு பயன்படுத்தி சரிசெய்யலாம்
தூரப்பார்வை
· ஹைப்பர்மெட்ரோபிய என்பது தூரப்பார்வை எனப்படும்.
· தூரப்பார்வைஉடைய ஒருவர் தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாக காணமுடியும்
· தூரப்பார்வைகுவி லென்சு பயன்படுத்தி சரிசெய்யலாம்.
குறிப்புகள்.
1.1849-இல்அர்மண்ட பிஷே என்பவரால் பூமியில் ஒளியின் திசைவேகம் கண்டறியப்பட்டது.
2.இழைஒளியியல் தந்தை – நரிந்தர் சுபானி (இந்தியர்)
Presented by,
Rajeswari K
Tnpsc Student
Magme School Of Banking
No comments:
Post a Comment