இயக்கம், விசை, மற்றும் பருபொருட்கள் - 15 Mints Seminar Notes
இயக்கம்
· பொருட்கள் அதன் நிலைமாறாமல் இருந்தால் ஓய்வாக உள்ளன என்றும் பொருட்கள் அதன் நிலையில் இருந்து மாறி கொண்டிருந்தால் அவை இயங்குகின்றன என்றும் பொருள்.
இயக்கத்தின் வகைகள்
· நேரான இயக்கம்
· வட்ட இயக்கம்
· அலைவு இயக்கம்
· சீரான இயக்கம்
· ஒழுங்கற்ற இயக்கம்
நிலைமம்
· தன்மீதுசமமற்றபுறவிசைஏதும் செயல்படாத வரை பொருளானது தமது ஓய்வு நிலையிலோ அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்கோட்டு இயக்கம் நிலையிலும் தொடர்ந்து இருக்கும். இப் பண்பினை நிலைமம் என்று அழைக்கிறோம்.
நிலைமம் வகைகள்
· ஓய்வில் நிலைமம்
· இயக்கத்தின் நிலைமம்
· திசையில் நிலைமம்
தொகுபயன் விசை
· ஒருபொருள்மீதுபல்வேறு விசைகள் செயல்படும் போது அவைகளின் மொத்த விளைவை ஒரு தனித்த விசையின் மூலம் அளவிடலாம்.இது தொகுபயன்விசை என அழைக்கப்படுகிறது.
இரட்டையின்திருப்புத்திறன்
· இரட்டை இன் திருப்புத்திறன் மதிப்பு ஏதேனுமொரு விசையின் எண்மதிப்பு மற்றும் நிலைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு இவைகளின் பெருக்கற்பலன் மதிப்பிற்கு சமம் ஆகும்
எடை· ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை என அழைக்கப்படுகிறது இதன் அலகு நியூட்டன் அல்லது கிலோகிராம் விசை
தோற்ற எடை
· புவியீர்ப்பு விசை மட்டுமின்றி இன்ன பிற விசைகளால் ஒரு பொருளின் எடையில் மாற்றம் ஏற்படும் இந்த எடை தோற்ற எடை என்று அழைக்கப்படுகிறது
எடை இல்லா நிலை
· மேலிருந்து கீழேவரும் பொருட்களின் முடுக்கம் உயிர்ப்பு முகத்திற்கு சமமாக உள்ள போது எடை முற்றிலும் குறைந்து சுழிநிலைக்கு வருகிறது இது இடைநிலை என்று அழைக்கப்படுகிறது
பொருளின் சமநிலை
· ஒரு பொருளின் ஆரம்ப நிலையிலே தக்கவைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்
· இது மூன்று வகைப்படும்
· உறுதி சமநிலை
· உறுதியற்ற சமநிலை
· நடுநிலை சமநிலை
குறிப்புகள்
· பொருள் தொடர்ந்து இயக்க விசை தேவைப்படுகிறது-அரிஸ்டாட்டில்
பொருள் தொடர்ந்து இயக்க விசை தேவை இல்லை-கலிலியோ
மையநோக்கு விசை ஆனது ஒரு தனித்த இயற்கை விசை அல்ல
எந்த ஒரு இயற்கை விசையும் மயிலுக்கு விசையாக செயல்படலாம்.
விசை
· ஒரு பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது இயக்கநிலையையோ மாற்றுகின்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல்விசை எனப்படும்
விசை ஒரு வெக்டர் அளவு .அதன் SI அலகு நியூட்டன்.
விசையின் வகைகள்
· சமமான விசை
· சமமற்ற விசை
சமமான விசை
· ஒருபொருளின் மீது செயல்படும் விசைகள் பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது இயக்க நிலையையோ மாற்றாமல் இருந்தால் அவைகள் சமமான விசை எனப்படும்.
தொடு விசை
· தொடுவதன் மூலம் ஒரு பொருளின் மீது விசை செலுத்தி அதனை இயக்க நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் ஆனால் அத்தகைய விசையை தொடு விசை என்கிறோம்.
தொடா விசைகள்
· ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள் எனப்படும்
எடுத்துக்காட்டு
· காந்தவிசை
· புவியீர்ப்பு விசை
· நிலை மின் விசை
விசையின் செயல்பாடுகள் மற்றும் விளைவுகள்· விசையானது ஓய்வுநிலையில் உள்ள ஒருபொருளை இயங்கச் செய்யலாம்.
· விசை அல்லது ஏற்கனவே இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் வேகத்தை மாற்றலாம்.
· விசை அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளின் திசை மாற்றலாம்.
· விசையானது ஒரு பொருளின் வடிவத்தை மாற்றலாம்.
ஆற்றல்· பொருள் ஒன்று வேலையை செய்வதற்கான திறன் அதன் ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது.
இயந்திர ஆற்றலின் வகைகள்
· இயந்திர ஆற்றல் மூலம் நிலையாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும் இயங்கும் பொருளை ஓய்வுநிலைக்குக் கொண்டு வரவும் முடியும்
· இயந்திர ஆற்றல் நிலை ஆற்றல் இயக்க ஆற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது
நிலை ஆற்றல்
· பொருள் ஒன்று அதன் நிலையை பொறுத்து அல்லது அதன் தீர்ப்பை பொறுத்து பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்.
· தரையிலிருந்து பொருளை உயர்த்த செய்யப்படும் வேலை அதன்நிலை ஆற்றல் ஆகும்.
இயக்க ஆற்றல்
· பொருள் ஒன்று அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். பொருளின் இயக்க ஆற்றல் அதன் வேகத்தைப் பொருத்து அதிகரிக்கிறது
வேதி ஆற்றல்
· வேதி ஆற்றல் என்பது வேதனையின் போது வெளிப்படும் ஆற்றல்
எடுத்துக்காட்டாக மரம் நிலக்கரி பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேறு ஆற்றலாகும்
வேதி ஆற்றலின்பயன்கள்:
· தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கு செயல்களுக்கும் உதவுகிறது
· மின்கலன்களின் உள்ள வீடுகளில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது
· எரிபொருள்களின் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும் ஒளி ஆற்றல் ஆகவும் மாற்றப்படுகிறது.
Presented By,
Lavanya
Tnpsc Student
Magme School Of Banking
No comments:
Post a Comment